Beast Scenes vs Ajith Movie: பீஸ்ட் கெட்டப் உடன் ஒத்துப் போகும் அஜித்தின் ஃப்ளாப் பட கெட்டப்... காவு வாங்கியதா சென்டிமென்ட்!
Beast Scenes vs Ajith Movie: ஒரே வேளை அந்த ராசி தான், படத்திற்கு கிடைத்த நேர்மறை விமர்சனத்திற்கு காரணமோ என்கிற கேள்வியையும் பலர் முன் வைக்கின்றனர்.
ஒப்பீடு சரியா... என்று கேட்டால், தனிப்பட்ட முறையில் தவறு என்று தான் கூற வேண்டும். ஆனால் சில இடங்களில் ஒப்பீடுகள், ஒருவித மகிழ்ச்சியை தரும். அது லாஜிக் இல்லாத மேஜிக் ஒப்பீடாக இருக்கும். அப்படி ஒரு ஒப்பீடு தான், பீஸ்ட் பட காட்சிகளில் வருகிறது. அதுவும், தளபதி படத்திற்கு தல படத்திலிருந்து ஒப்பீடு வந்தால் எப்படி இருக்கும்.
பீஸ்ட் வெளியான நாளிலிருந்து கலவை விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக எதிர்மறை விமர்சனங்களை அதிகம் சம்பாதித்துள்ளது பீஸ்ட். ட்ரெய்லர் அளவிற்கு படம் இல்லை என்பதும், ட்ரெய்லரில் முழு கதையும் தெரிந்ததும் அதற்கு காரணமாக கூறப்படுகிறது. இயக்குனர் நெல்சனின் இயக்கத்தை விஜய் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். அதற்கு பல்வேற காரணங்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் இன்னொரு விசயமும் நிழலோடிக் கொண்டிருக்கிறது. அது தான், ஒப்பீடு.
நடிகர் அஜித் நடித்து ஃபிளாப் ஆன பல படங்களில் காட்சிகள், பீஸ்ட் படத்தில் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அந்த சென்டிமென்ட் தான், தற்போது பீஸ்ட் தோல்விக்கு காரணம் என்றும் சிலர் பதிவுகளை போடத் தொடங்கிள்ளனர். அது உண்மை தானா... பார்க்கலாம்...
அஜித் நடித்து பெரிய ஹிட் ஆன பில்லா படத்தை தொடர்ந்து அதை வைத்து சக்ரி டோலட்டி, பில்லா இரண்டாம் பாகத்தை எடுத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த தோல்வியை அஜித் உள்ளிட்ட பலரும் எதிர்பார்க்கவில்லை. பீஸ்ட் படத்தில் அஜித்தின் பில்லா 2 காட்சிகளை போன்று பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, பீஸ்ட் படத்தில் ரத்தம் படிந்த சட்டையை விஜய் அணிந்திருப்பார். அது தான் பீஸ்ட் படத்தின் அடையாளமாகவும் கொண்டாடப்படுகிறது. அதே மாதிரியான ரத்தம் படிந்த சட்டையை அஜித், பில்லா 2 படத்தில் பயன்படுத்தியிருப்பார்.
அதே போல பில்லா 2 படத்தில் வரும் பல காட்சிகள், குறிப்பாக அஜித் அணிந்திருக்கும் ஆடை வடிவமைப்புகளை பீஸ்ட் படத்தில் விஜய் பயன்படுத்தியுள்ளார். அதே போல, இயக்குனர் விஜய் இயக்கிய கிரீடம் படம், அஜித் வரலாற்றில் மோசமான தோல்வியை சந்தித்தப்படம். படம் பாராட்டும் படி இருந்தாலும், மாஸ் ஹீரோ அஜித்திற்கு அந்த கதாபாத்திரம் எடுக்கவில்லை. அதனால், அது தோல்வி படமாக அமைந்தது. அதில் கிளைமாக்ஸ் காட்சியில் முகம் முழுக்க சேறும் சகதியுமாக அஜித் அமர்ந்திருப்பார். அதே போல கெட்டப்பில் விஜய் இருக்கும் காட்சிகளும், பீஸ்ட் படத்தில் இருந்தது. அதை போஸ்டரிலும் பயன்படுத்தியிருந்தனர். அஜித்திற்கு எடுபடாத அந்த படத்தின் காட்சிகளும் பீஸ்டில் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல, பரமசிவன் உள்ளிட்ட அஜித்தின் எடுபடாத பல படங்களின் கெட்டப்புகள், பீஸ்ட் படத்தில் விஜய்க்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே வேளை அந்த ராசி தான், படத்திற்கு கிடைத்த நேர்மறை விமர்சனத்திற்கு காரணமோ என்கிற கேள்வியையும் பலர் முன் வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்