மேலும் அறிய

Fathima Vijay Antony: நீ இல்லாமல் வாழ முடியவில்லை.. திரும்பி வந்துவிடு.. விஜய் ஆண்டனி மனைவியின் உருகவைக்கும் பதிவு!

Fathima Vijay Antony :மகளின் நினைவாக வாடித் துடிக்கும் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி, எக்ஸ் தளத்தில் உருக்கமான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). சமீபத்தில் தான் இவர் நடித்த ஆக்ஷன் திரில்லர் ஜானரில் 'ரத்தம்' திரைப்படம் வெளியானது. இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

விபத்து

இதற்கு முன்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன் 2 ' படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடுக்கடலில் ஷூட்டிங் நடைபெற்று கொண்டு இருக்கும்போது, மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஏராளமான அறுவை கிச்சைகளுக்கு பிறகு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். அந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் அவரின் வாழ்க்கையில் அடுத்த அடியாக எதிர்பாராதவிதமாக அவரின் மகளை பறிகொடுத்தார் விஜய் ஆண்டனி.  

Fathima Vijay Antony: நீ இல்லாமல் வாழ முடியவில்லை.. திரும்பி வந்துவிடு.. விஜய் ஆண்டனி மனைவியின் உருகவைக்கும் பதிவு!

மகளின் இழப்பு

இந்த நிலையில் கடந்த மாதம் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தை நிலைகுலைய செய்ததோடு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. 16 வயதான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளின் இழப்புக்கு பின்னர் உடைந்து போன விஜய் ஆண்டனி, மகளின் நினைவாக சோசியல் மீடியா பக்கங்களில் உருக்கமான பதிவுகளை பதிவு செய்து வந்தார். அந்த துயர சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை என்றாலும் பணம் போட்டு தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைய கூடாது என்ற நோக்கத்திலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். 

உருக்கமான போஸ்ட்

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவும் மகளின் நினைவுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வரும் நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை மிகுந்த மன வலியுடன் போஸ்ட் செய்துள்ளார்.

"நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் உன்னை எனக்கு அருகிலேயே வைத்து பாதுகாத்து இருப்பேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டி இருக்க மாட்டேன். உன்னுடைய நினைவுகளால் நான் தினம் தினம் இறக்கிறேன்.  நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அப்பா அம்மாவிடம் திரும்பி வந்துவிடு. லாரா உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறாள். லவ் யூ தங்கம்..." என மிகவும் உருக்கமான பதிவை போஸ்ட் செய்துள்ளார். பாத்திமா தன்னுடைய இந்தப் பதிவில் விஜய் ஆண்டனியையும் டேக் செய்துள்ளார். 

ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் இந்த போஸ்டுக்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
Embed widget