மேலும் அறிய

Pichaikkaran 2: முதல் வாரத்தில் வசூல் வேட்டை... கலக்கல் ஹிட் கொடுத்த விஜய் ஆண்டனி... வெற்றி விழாவுக்கு தயாராகும் பிச்சைக்காரன் 2 படக்குழு!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

விஜய் ஆண்டனி இயக்கம், நடிப்பு, இசையில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் வெற்றி விழா விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மே 19ஆம் தேதி வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2.  கடந்த 2016ஆம் ஆண்டு சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக பிச்சைக்காரன் 2 சென்ற வாரம் வெளியானது. 

முன்னதாக அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து வெளியான பிச்சைக்காரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில்,  பிச்சைக்காரன் 2 படம் தங்கை செண்டிமெண்ட், மூளை மாற்று அறுவை சிகிச்சை என செண்டிமெண்ட், ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்து  வெளியானது. மேலும், தெலுங்கிலும் பிச்சகாடு 2 என்ற பெயரில் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.ம்மேலும் ஒரே வாரத்தில் இப்படம் 26 கோடிகளும் மேல் தமிழ், தெலுங்கு மொழிகளில் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

சுமார் 20 கோடிகள் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முதல் நாளே 6 கோடிகள் வரை வசூலித்த நிலையில், தமிழைக் காட்டிலும் தெலுங்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வரவேற்பைப் பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றி விழா நாளை (மே.27) விசாகப்பட்டினத்தில் நடக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

பிச்சைக்காரன் 2 திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இப்படம் தன் ஆய்வுக்கூடம் படத்தி்ன் கதை, இதற்காக விஜய் ஆண்டனி 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில், தன் படம் வெளியாவதைத் தடுப்பதற்காக உள் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ரீதியாக இழப்பையும் உளைச்சலையும் தான் சந்தித்து வருவதாகவும் விஜய் ஆண்டனி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

அதேபோல் மலேசியாவின் லங்காவி தீவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி, மூக்கு, தாடை எலும்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மாத கால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அவர் குணமடைந்து படப்பிடிப்புக்குத் திரும்பினார்.

இந்நிலையில், இப்படி பல பிரச்னைகளைக் கடந்து வெளியாகியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம், கலவையான விமர்சனங்களைக் கடந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget