மேலும் அறிய

Vijay - Sangeetha Divorce: ஆஜராகாத விஜய் - சங்கீதா.. வழக்கறிஞர் சொன்ன தகவல்.. விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

விஜய் - சங்கீதா தரப்புக்கு இடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மேலும் வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்  என முடிவு செய்ததாக கூறப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் - அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்க்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். காதல் மற்றும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 1999ம் ஆண்டு இந்த திருமணமானது நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய், சங்கீதா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் இருவரும் எந்தவித பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தனர். மேலும் சங்கீதா சென்னையில் விஜயுடன் இல்லை என்றும், லண்டனில் மகளுடன் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்படியான நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். 

அடுக்கடுக்கான புகார்கள்

இந்த சம்பவம் தமிழ்நாடு மக்களிடையேயும், விஜய் ரசிகர்களிடையேயும் பெரும் புயலை கிளப்பியது. விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு இந்த சம்பவம் பெரும் பின்னடைவாகவும் அமைந்தது. அதேசமயம் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர் பெயரை குறிப்பிடாத நிலையில் அடுத்த சில நாட்களில் ஒரு நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷாவுடன் பங்கேற்றது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. 

இந்த நிலையில் விஜய் - சங்கீதா ஆகிய இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மேலும் வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்   என முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. 

ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆனால் மனுதாரர்கள் விஜய், சங்கீதா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் வழக்கறிஞர்கள் ஜூன் 15ம் தேதி  விசாரணைக்கு இருவரும் ஆஜராவார்கள் என தெரிவித்ததால் நீதிபதி அந்நாளுக்கு வழக்கை ஒத்திவைத்தார். தேர்தல் நேரம் என்பதால் விவகாரத்து வழக்கு விஜய்க்கு பின்னடைவாக இருக்கும் என தவெக தொண்டர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget