‛என்ன ஆட வெச்சு பாக்குறீங்களா...’ சம்பளத்தை உயர்த்திய நடிகர்கள்!
தற்போது 120 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் இவர்கள், அடுத்த படத்தில் இருந்து 130 கோடியாக சம்பளத்தை உயர்த்துவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனும் தளபதி விஜய்யும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம்வருபவர்கள். இவர்களது கால்ஷீட்டிற்காக இயக்குநர்கள் வரிசையில் காத்திருப்பர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனது அடுத்த படங்களின் சம்பளத்தை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 120 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் இவர்கள், அடுத்த படத்தில் இருந்து 130 கோடியாக சம்பளத்தை உயர்த்துவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
பீஸ்ட் & விக்ரம்:
உலக நாயகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய சாதனையை படைத்திருந்தது. படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் இதனை ஆரவாரமாய் கொண்டாடினர்.அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் பாக்ஸ் ஆபிஸில் எந்த குறையும் இல்லை. 250 கோடி ரூபாய் வசூல் செய்தது பீஸ்ட்.
அடுத்த படத்திற்கு 130 கோடி!
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தளபதி விஜய் 120 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இவரின் அடுத்த படமான தளபதி 67-ல் இருந்து இவரது சம்பளம் 130 கோடியாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இயக்குநர் லோகேஷும் நடிகர் விஜய்யும் இதற்கு முன்னர் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்தனர்.தளபதி 67 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். மறுபுறத்தில் உலகநாயகன் கமல்ஹாசனும் தன் சம்பளத்தை உயர்த்தும் பேச்சுவார்த்தையில் உள்ளாராம். அவரின் அடுத்த திரைப்படத்திற்கு 130 கோடி அல்லது அதற்கும் மேல் சம்பளம் பெற உள்ளாராம். இந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களும் அவர்களின் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் அறிவிக்க இருக்கிறார். இந்நிலையில் கமல்ஹாசன் முன்னதாக நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படத்தின் சூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளது. உலக நாயகனின் இந்த திரைப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக உலக நாயகன் கமல் அமெரிக்கா செல்வதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்திற்கு பிறகு கமலஹாசன் பா ரஞ்சித் அல்லது மகேஷ் நாராயணன் உடன் இணையவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.