Actor Vijay: விவாகரத்து செய்தாரா விஜய்?.. குழப்பம் விளைவித்த மர்ம நபர்கள்.. வைரலாக பரவிய புகைப்படம்!
விஜய்க்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தாகிவிட்டது என வதந்திகள் பரவி வரும் நிலையில் விஜய்யின் விக்கிப்பீடியா பக்கத்தில் அத்துமீறி மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'வாரிசு'. இதுவரையில் விஜய் நடிப்பில் வெளியான எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவிற்கு இப்படத்திக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. அதற்கு முக்கியமான காரணம் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இருவரின் படமும் ஒரே நேரத்தில் பொங்கல் ரிலீஸாக வெளியாவது தான்.
சங்கீதா மிஸ்ஸிங் :
வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் குறித்து சில சர்ச்சைகள் எழுந்தன. அந்த விழாவில் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொள்ளவில்லை. பொதுவாக விஜய் திரைப்படம் பற்றிய நிகழ்ச்சிகளோ அல்லது பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகளோ என்றுமே விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதா கலந்து கொள்வார். ஆனால் இயக்குநர் அட்லீ மனைவி பிரியாவின் சீமந்த விழாவிலும், வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அவர் மிஸ்ஸிங்.
EXCLUSIVE: #ThalapathyVIJAY to celebrate Christmas with #SangeethaVijay in London. He will be visiting his wife Sangeetha's parents after attending the #Varisu Audio Launch. #Beast #Varisu #Vaarasudu #వారసుడు #Thalapathy67 @actorvijay pic.twitter.com/K3FFENXh8t
— Actor Vijay Team (@ActorVijayTeam) November 28, 2022
கருத்து வேறுபாடு காரணமா?
விஜய் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை பார்ப்பதற்காக சங்கீதா சென்றுள்ளார் என கூறப்படுகிறது. அதனால் தான் அவரால் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஒரு சிலரோ அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாகவும் தெரிவிக்க
விக்கிப்பீடியாவில் சங்கீதா :
ஆனால் உண்மையில் சங்கீதா விடுமுறைக்காக லண்டன் சென்று மகன் மகளுடன் இந்த நியூ இயரை கொண்டாட சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய்யும் பணிகள் அனைத்தையும் முடித்த பின்னர் லண்டன் செல்ல உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சோசியல் மீடியாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு வதந்திகள் பரவுவது போல இந்த முறை விஜய் விக்கிப்பீடியா பக்கத்தில் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம். திருமணமான ஆண்டு 1999 என்றும் விவாகரத்து பெற்ற ஆண்டு 2022 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பார்ட்னர் என்ற இடத்தில் கீர்த்தி சுரேஷ் என்றும் விஜய்க்கு மூன்று குழந்தைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிப்பீடியா பக்கத்தில் யார் வேண்டும் என்றாலும் எடிட் செய்யமுடியும். எனவே வேண்டும் என்றே யாரோ இப்படி விஜய்யின் விக்கிப்பீடியா பக்கத்தில் பொய்யாக தகவலை மாற்றியுள்ளனர் என்பதால் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.