Viduthalai Poster Released: சூரிக்கு தான் மெயின் ரோல்.. 'விடுதலை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..
Viduthalai Poster Released: இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியம்ங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பான 'விடுதலை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் விஜய் சேதுபதியின் மற்றும் நடிகர் சூரி இதில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கின்றனர்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங்களில், தன் தனித்த முத்திரை கொண்ட படங்களினால் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றவர். விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி கதை நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடிக்கவுள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
நடிகர் சூரி தனது ட்விட்டர் பதிவில், " என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏர்படுத்திக்குடுத்த இயக்குனர்
வெற்றி மாறன் அண்ணனுக்கும் இசைஞானி ஐயா இளையராஜா அவர்களுக்கும் எல்ரெட் குமார் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ! புதிய பரிமாணத்தில் மாமா விஜய சேதுபதி இனைவதில் மகிழ்ச்சி" என்று பதிவிட்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியம்ங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
Here it is @VetriMaaran ‘s #Viduthalai first look posters.#Ilaiyaraja @sooriofficial @elredkumar @rsinfotainment @VelrajR @mani_rsinfo @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/DxfKG1Lv9m
— VijaySethupathi (@VijaySethuOffl) April 22, 2021
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் வெற்றி மாறன். ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்தது. 63 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படமாக விசாரணை படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுககான 67-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் அசுரன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது.