மேலும் அறிய

Viduthalai Movie: அப்படிபோடு...! விடுதலை ஓடிடி வெர்ஷனில் சேர்க்கப்படும் கூடுதல் காட்சிகள்?

படம் குறித்து வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை படத்தில் கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச்.31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. 

விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ,பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் மேனன் தமிழ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், இணையத்தில் விவாதப்பொருளாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

வெற்றிமாறனுடன் இந்தப் படத்தில் இளையராஜா முதன்முறையாக கூட்டணி அமைத்த நிலையில், காட்டு மல்லி, உன்னோட நடந்தா உள்ளிட்ட பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் லைக்ஸ் அள்ளியது. மேலும் சூரியின் கதாபாத்திரமும் அதற்கான அவரது உழைப்பும் அனைவரது பாராட்டுகளைஒயும் அள்ளியது.

ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு  இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியதாகத் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வாச்சாத்தி சம்பவம், 1987ஆம் ஆண்டு அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல உண்மை சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கதை குறித்த சர்ச்சைகள் எழுந்து விடுதலை படத்தின் கதை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும், சோளகர் தொட்டி புத்தகங்களின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாக இணையத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால இவற்றின் இடையே விசிக தலைவர் எம்பி தொல், திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத்துறையினரும் இந்தப் படத்துக்கும், வெற்றிமாறனுக்கும், சூரி உள்ளிட்ட நடிகர்களுக்கும் பாராட்டு மழையைப் பொழிந்தனர்.

இந்நிலையில், படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும், திரையரங்குகளில் நேரம் கருதி குறைக்கப்பட்ட காட்சிகள், ஓடிடியில் வெளியிடப்படும்போது இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் குறித்து வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும், சுமார் 20 நிமிட கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதியின் வாத்தியர் கதாபாத்திரம் முதல் பாகத்தில் குறைந்த காலமே வந்த நிலையில், முதல் பாகம் அவரது கதாபாத்திரத்துக்கு லீட் கொடுத்து முடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை மையப்படுத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
Embed widget