Ajith Kumar : பொருள் அந்த மாதிரி வர்மா...9 கோடிக்கு ஃபெராரி வாங்கிய அஜித் குமார்
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் அஜித் குமார் துபாயில் 9 கோடி மதிப்புள்ள புதிய ஃபெராரி கார் வாங்கியுள்ளார்
![Ajith Kumar : பொருள் அந்த மாதிரி வர்மா...9 கோடிக்கு ஃபெராரி வாங்கிய அஜித் குமார் Vidamuyarchi actor ajith kumar buys new Ferrari worth 9 crores Ajith Kumar : பொருள் அந்த மாதிரி வர்மா...9 கோடிக்கு ஃபெராரி வாங்கிய அஜித் குமார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/eec2a77807b628d45a046330bcae587f1721811268443572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அஜித் குமார்
சிறிய வயது முதலே ரேஸ் கார்கள் மற்றும் பைக் மீது அதீத பிரியம் கொண்டவர் நடிகர் அஜித். தற்போது நடிப்பு தவிர்த்து தனத் பெரும்பாலான நேரத்தில் பைக்கில் உலகத்தை வலம் வருவதில் செலவிட்டு வருகிறார். இதில் ஏற்கனவே இந்திய கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விட்ட அஜித் அடுத்த கட்டமாக தனது பைக்கர்ஸ் குழுவுடன் உலகத்தை சுற்றி வர இருக்கிறார்.
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுக்கு வந்தது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்த் கையோடு துபாயில் புதிய சிவப்பு நிற ஃபெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளார் அஜித். இந்த காரின் மொத்த மதிப்பு 9 கோடியாகும். தனது புது காருடன் நடிகர் அஜித்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இப்ப தான் அந்த Ferrari வோட மதிப்பு கூடியிருக்கு! #Ajithkumar sir ! #GoodBadUgly #VidaaMuyarchi pic.twitter.com/0DS7vqYa0S
— 🔥 Ajith Kumar🔥Fan (@thala_speaks) July 23, 2024
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)