மேலும் அறிய

Vidaamuyarchi: தீபாவளிக்குத் தயாராகும் அஜித்தின் விடாமுயற்சி? இயக்குநரின் புதிய பிளான்.. ரசிகர்கள் உற்சாகம்!

Vidaa muyarchi : அஜித்தின் விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கு வெளியிட இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'துணிவு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது அஜித் தனது 62ஆவது படத்தில் நடித்து வருகிறார். 

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு 'விடாமுயற்சி' என தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க பிக்பாஸ் புகழ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் கிங் அர்ஜூன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

Vidaamuyarchi: தீபாவளிக்குத் தயாராகும் அஜித்தின் விடாமுயற்சி? இயக்குநரின் புதிய பிளான்.. ரசிகர்கள் உற்சாகம்!

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அஜர்பைஜானில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக லொகேஷனை தேர்வு செய்து வருகிறார்கள் என கூறப்பட்டது. பெரிதாக படம் குறித்த வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. முதலில் இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதை மீது பெரிய ஈடுபாடு இல்லாததால் அவருக்கு பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி ஒப்பந்தமானார்.  

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனிடையே நடிகர் அஜித் அவ்வப்போது பைக் டூர் சென்று வரும் நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே  அஜித்தின் குட் பேட் அக்லி எனும் அடுத்த படத்துக்கான அப்டேட்டும் முன்னதாக வெளியானது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் மீதியுள்ள படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் தொடர்ச்சியாக முடிக்க முடிவெடுத்துள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget