மேலும் அறிய

Vidaa Muyarchi: லண்டனிலிருந்து புது லுக்கில் வந்திருக்கும் அஜித்.. இந்த வாரமே சூட்டிங் செல்லும் விடாமுயற்சி குழு

அஜித்தின் 62வது படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது. 

தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஏ.கே தனக்கான தனி இடத்தில் உள்ளார். இவரது படம் குறித்த அப்டேட்டுக்காக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே காத்திருக்கும் அளவிற்கு இவரது படத்தின் ரிலீஸ் மிகவும் முக்கியம் வாந்ததாக இருக்கும். இந்நிலையில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமாரின் 62வது திரைப்படம் உருவாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தின் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், லைக்காவில் நடைபெற்ற ரெய்டுகளால் படப்பிடிப்பு இந்த வ்வாரம் இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. புது லுக் போட்டோ சூட்டுக்காக லண்டனுக்குச் சென்று திரும்பியுள்ள அஜித்தின் காட்சிகள் தான் முதலில் சூட் செய்யப்படுகிறதாம். மேலும், இந்த சூட்டிங் புனேவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடைபெறவுள்ளது.  நடிகர் அஜித்குமார் நடிக்கும் 62வது படத்திற்கு ”விடா முயற்சி” என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளர் போனிகபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அவர் 3வது முறையாக இப்படத்தில் இணைந்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 62வது படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது. 

அஜித்குமார் 62

அஜித் நடிக்கும் 62வது படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படத்தின் கதை தயாரிப்பு தரப்பை திருப்தி செய்யாத காரணத்தால் விக்னேஷ் சிவன் அப்படத்தில் இருந்து விலக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து தடையறத்தாக்க, மீகாமன், தடம், கண்ணை நம்பாதே உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பல மாதங்களாக அது வெறும் தகவலாக மட்டுமே இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்ற்றமடைந்தனர்.

அஜித் பிறந்தநாள்

இந்நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே மாதம் 1ஆம் தேதி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் அஜித்தின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியானது. எதிர்பார்த்ததைப் போல அவரின் 62வது படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த படத்திற்கு “விடாமுயற்சி” என பெயரிடப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்த டைட்டிலின் கீழ் "EFFORTS NEVER FAIL" என கேப்ஷன் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் கடைசி வாரம் தொடங்கும் என தகவல் வெளியானது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இதனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக அஜித் ஆங்கிலத்தில் “வி” எழுத்தில் தொடங்கும் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம், வலிமை ஆகிய படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் வெளியாகியிருந்தது. அந்த வகையில் தற்போது “விடாமுயற்சி” படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.-  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "பழைய முறையிலே நிதி வேண்டும்" ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin Vs Modi: தேர்தல் சீசன் வந்தால் அடிக்கடி தமிழகம் வரும் மோடி.! துரோகத்திற்கு தமிழ்நாடு தோல்வியை தரும் - ஸ்டாலின்
தேர்தல் சீசன் வந்தால் அடிக்கடி தமிழகம் வரும் மோடி.! துரோகத்திற்கு தமிழ்நாடு தோல்வியை தரும் - ஸ்டாலின்
Ramadoss Slams Modi Meeting: “மாம்பழம் சின்னம் ஒதுக்கவே இல்ல, அத எப்படி பயன்படுத்தலாம்?“; மோடி கூட்டம் - சீறும் ராமதாஸ்
“மாம்பழம் சின்னம் ஒதுக்கவே இல்ல, அத எப்படி பயன்படுத்தலாம்?“; மோடி கூட்டம் - சீறும் ராமதாஸ்
இயற்கை விவசாயம்... மாற்றி யோசித்து நிறைவான வருமானம் பெற்ற வெற்றி விவசாயி
இயற்கை விவசாயம்... மாற்றி யோசித்து நிறைவான வருமானம் பெற்ற வெற்றி விவசாயி
ABP Premium

வீடியோ

”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!
”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "பழைய முறையிலே நிதி வேண்டும்" ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin Vs Modi: தேர்தல் சீசன் வந்தால் அடிக்கடி தமிழகம் வரும் மோடி.! துரோகத்திற்கு தமிழ்நாடு தோல்வியை தரும் - ஸ்டாலின்
தேர்தல் சீசன் வந்தால் அடிக்கடி தமிழகம் வரும் மோடி.! துரோகத்திற்கு தமிழ்நாடு தோல்வியை தரும் - ஸ்டாலின்
Ramadoss Slams Modi Meeting: “மாம்பழம் சின்னம் ஒதுக்கவே இல்ல, அத எப்படி பயன்படுத்தலாம்?“; மோடி கூட்டம் - சீறும் ராமதாஸ்
“மாம்பழம் சின்னம் ஒதுக்கவே இல்ல, அத எப்படி பயன்படுத்தலாம்?“; மோடி கூட்டம் - சீறும் ராமதாஸ்
இயற்கை விவசாயம்... மாற்றி யோசித்து நிறைவான வருமானம் பெற்ற வெற்றி விவசாயி
இயற்கை விவசாயம்... மாற்றி யோசித்து நிறைவான வருமானம் பெற்ற வெற்றி விவசாயி
Mankatha : எது நாகர்ஜூனாவா ! மங்காத்தா படத்தில் அர்ஜூன் வேடத்திலா ? நடிக்க மறுத்தது ஏன் ?
Mankatha : எது நாகர்ஜூனாவா ! மங்காத்தா படத்தில் அர்ஜூன் வேடத்திலா ? நடிக்க மறுத்தது ஏன் ?
Chennai Weather: சென்னையில் மாறிய வானிலை.. திடீரென பெய்த மழை.. மகிழ்ச்சியில் மக்கள்!
Chennai Weather: சென்னையில் மாறிய வானிலை.. திடீரென பெய்த மழை.. மகிழ்ச்சியில் மக்கள்!
Cheapest CNG Automatic Car: 28 கி.மீ மைலேஜ்; மேம்பட்ட அம்சங்கள்; இந்தியாவின் மலிவான தானியங்கி CNG கார் பற்றி தெரியுமா.? விலை என்ன.?
28 கி.மீ மைலேஜ்; மேம்பட்ட அம்சங்கள்; இந்தியாவின் மலிவான தானியங்கி CNG கார் பற்றி தெரியுமா.? விலை என்ன.?
ABP Exclusive: என் இசையின் காரணகர்த்தா தந்தை தான்.. வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியம் நெகிழ்ச்சி!
ABP Exclusive: என் இசையின் காரணகர்த்தா தந்தை தான்.. வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியம் நெகிழ்ச்சி!
Embed widget