Raayan: தனுஷின் 50 ஆவது படம் ராயன் இன்று ரிலீஸ்... சூர்யா முதல் வெற்றிமாறன் வரை - குவியும் பிரபலங்களின் வாழ்த்து
தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள ராயன் படம் வெளியாவதை முன்னிட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் தனுஷூக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்
ராயன்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்துள்ள 50 ஆவது படம் ராயன். ராயன் படத்தின் வெற்றிக்கும் 50 படங்கள் என்கிற மைல் கல்லை எட்டியுள்ள தனுஷிற்கும் தமிழ் திரையுலகினர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
வெற்றிமாறன்
தனுஷின் ஆதர்ஷ இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் ராயன் படத்திற்கு தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். தனுஷின் கடின உழைப்பிற்காகவும் சினிமா மீது அவர் கொண்டிருக்கும் காதலுக்காகவும் ராயன் படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா
Congratulations on the 50th film @dhanushkraja . Wishing you huge success for your relentless hard work and passion for cinema! Heartfelt Best wishes to the team of #Raayan!@dhanushkraja @arrahman @sunpictures pic.twitter.com/wiftjmkcyg
— Bharathiraja (@offBharathiraja) July 25, 2024
இயக்குநர் இமயம் பாரதிராஜா ராயன் படத்தின் வெற்றிக்கு தன் வாழ்த்தை பதிவு செய்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
சூர்யா மற்றும் கார்த்தி
Congratulations on the 50th film @dhanushkraja . Wishing you huge success for your relentless hard work and passion for cinema! Heartfelt Best wishes to the team of #Raayan!@arrahman @sunpictures @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj…
— Karthi (@Karthi_Offl) July 25, 2024
ராயன் படத்தின் வெற்றிக்கு நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா இருவரும் வாழ்த்து பதிவிட்டுள்ளார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார்
Best wishes my dear real friend @dhanushkraja on ur #D50 release … it’s an iconic feat . Looking forward for a record breaking opening tomm . Wishing u nothing but the best dear D ….
— G.V.Prakash Kumar (@gvprakash) July 25, 2024
தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வாத்தி ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ் ராயன் படத்தின் வெற்றிக்கு தன் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.