![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
என்ன கொடும சார் இது... பயில்வான் கையில் ஆஸ்கர்?? குழப்பிய வெங்கட்பிரபு..
பயில்வான் ரங்கநாதனுக்கு வாழ்த்து சொல்லி இயக்குனர் வெங்கட் பிரபு போட்ட போஸ்ட்டால் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்.
![என்ன கொடும சார் இது... பயில்வான் கையில் ஆஸ்கர்?? குழப்பிய வெங்கட்பிரபு.. Venkat prabu latest post wishing bayilvan ranganathan for oscar awards confuses the fans and netizans என்ன கொடும சார் இது... பயில்வான் கையில் ஆஸ்கர்?? குழப்பிய வெங்கட்பிரபு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/01fffe354c54dad426ffb69c052884fd1682407397504224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் ஒரு சினிமா பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். சமீப காலமாக சினிமா பற்றியும், திரைத்துறையினர் பற்றியும் பல அவதூறான விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்த செயலால் திரை பிரபலங்கள் பலரும் இவரின் மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.
ட்ரெண்டிங் பயில்வான் ரங்கநாதன் :
அவ்வப்போது ஏதாவது ஒரு சினிமா பிரபலம் குறித்து எதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி இணையத்தில் வைரலாகும் பயில்வான் ரங்கநாதன் தற்போது வேறு ஒரு தகவலுக்காக இணையத்தில் மிகவும் ட்ரெண்டிங்காகி வருகிறார். பயில்வான் இரண்டு கைகளிலும் ஆஸ்கார் விருதுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களை பயங்கரமாக குழப்பமடைய செய்துள்ளது.
தெலுங்கில் அறிமுகம் :
சென்னை 28, மங்காத்தா போன்ற மாபெரும் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படமும் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. அவருக்கு மட்டுமின்றி நடிகர் சிம்புவுக்கும் அது ஒரு கம் பேக் ஹிட் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தற்போது நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் 'கஸ்டடி' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மே 12ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார்.
குழப்பும் வெங்கட் பிரபு :
இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் "பின்னணி இசை மற்றும் பாடலுக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் இசை வெள்ளம் பயில்வான் ரங்கநாதன் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகவும் பெருமையான தருணம். உங்கள் பணிகளுக்கு நான் மிக பெரிய ரசிகன் சார். மேலும் விபரங்கள் அறிய நாளை மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவை பார்க்கவும்" என பதிவிட்டுள்ளார்.
வெங்கட் பிரபுவின் இந்த பதிவை பயில்வான் ரங்கநாதனுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். என்னடா இது புதிய ட்விஸ்ட்டா இருக்கே என மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)