The GOAT Trailer Review : காத்திருக்கும் பல வெரைட்டி.. சம்பவம் செய்ததா 'தி கோட்' டிரைலர்? ஒரு பார்வை
The GOAT trailer review : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றதா டிரைலர் வாங்க பார்க்கலாம்.
ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல நாட்களாக மக்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த 'தி கோட்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபுவின் ஆல் டைம் சூப்பர் ஹிட் படமான மங்காத்தா ஸ்டைலுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள இந்த 'தி கோட்' படத்தின் டிரைலர் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. அப்பா - மகன் என டபுள் ஆக்ஷனில் கலக்கும் விஜய் டீ ஏஜிங் காட்சிகளும் டிரைலரில் இடம் பெற்றுள்ளன.
பல ட்ரோல்களை சந்தித்த நிலையில் அது தற்போது திரையில் காணும் போது இன்னும் பெட்டராக பார்க்கும் படி இருக்கிறது. அது தவிர மங்காத்தா, போக்கிரி, கில்லி அனைத்தின் கலவையும் ட்ரைலரில் அங்கங்கே வந்து போனது படத்தில் பல வெரைட்டி காத்திருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் மட்டுமே இல்லாமல் குடும்ப செண்டிமெண்ட், ஜாலி, சேட்டை என கலக்கலாக வெளியாகி உள்ளது.
பிரச்சனைகள் அதிகரிக்க அதிகரிக்க அப்பாவும் - மகனும் சேர்ந்து காம்போவில் எப்படி அடி தூள் செய்து அதில் இருந்து மீள்கிறார்கள் என்பது தான் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப் ஸ்டார் பிரஷாந்த், பிரபுதேவா இருவருக்கும் விஜய்க்கு ஈக்குவல் முக்கியத்துவம் கொடுப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான நெகட்டிவ் ஷேடில் மோகன் என்ட்ரி கொடுக்கிறார். எக்கச்சக்கமான ரேஸிங், ஜம்ப் காட்சிகள் என மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது இந்த டிரைலர். பல நாட்களுக்கு பிறகு ஃபுல் பார்மில் இருக்கும் விஜய் படமாக இது கண்களுக்கு ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறது.
இது வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதைக்களமா, டைம் ட்ராவல் இருக்கிறதா என பல ட்விஸ்ட்களும் உள்ளன. வெங்கட் பிரபு படங்களின் ஸ்பெஷாலிட்டியே சர்ப்ரைஸ் ட்விஸ்ட் தான்.
அந்த வகையில் இப்படத்தில் அந்த சர்ப்ரைஸ் எலிமெண்ட் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது. இப்படம் மூலம் வெங்கட் பிரபுவின் வேறு ஒரு டைமென்ஷன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ஸ்கோர் செய்கிறது. விஎஃப்எக்ஸ், இசை பற்றி ட்ரோல் செய்தவர்கள் அனைவரையும் சற்று வாயடைத்ததுபோல இந்த டிரைலர் அமைந்துள்ளது. கொஞ்சம் ராவான டிரைலராக இருந்தாலும் படத்தை நிச்சயம் ரசிகர்கள் என்ஜாய் செய்வார்கள் என தெரிகிறது. செப்டம்பர் 5ம் தேதி வரை சம்பவத்திற்காக காத்திருக்கலாம்.