Vendhu Thanindhathu Kaadu: இன்னும் சற்று நேரத்தில் அனைத்து சேனல்களிலும்... வெந்து தணிந்தது காடு அப்டேட்!
நடிகர் சிம்பு நடித்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான தொலைக்காட்சிகளுக்கான ப்ரோமோ இன்று மாலை 6 மணிக்கு உங்களது அபிமான தொலைக்காட்சிகளில் வெளியாக உள்ளது.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக்கத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கௌதம் மேனன் - எழுத்தாளர் ஜெயமோகன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் கதை ஜெயமோகன் எழுதியிருந்தார். அதை கௌதம் மேனன் விரிவாக்கம் செய்து திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
TV spots of @SilambarasanTR_ - @menongautham's #VendhuThanindhathuKaadu will be telecasted in your fav channels from today 6pm ! Stay tuned to witness the exciting new cuts.
— Vels Film International (@VelsFilmIntl) September 10, 2022
An @arrahman Musical
Prod by @VelsFilmIntl @IshariKGanesh
A @RedGiantMovies_ Release @Udhaystalin pic.twitter.com/WvDiMElLzp
ஜெயமோகன் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், வெந்து தணிந்தது காடு நீளமான படமாக இருக்கும். இது ஒரு முழு வாழ்க்கை கதையாகும். படம் மெதுவாகத் தான் செல்லும். ட்ரெய்லரின் வன்முறை காட்சிகள் இருப்பதைப் பார்த்து ஆக்ஷன் படம் என நினைக்காதீர்கள். இந்த படம் இப்போது உயிரோடு இருக்ககூடிய ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாறு தான் என படக்குழு தெரிவித்துள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் மக்களிடையே வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சிகளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாக உள்ளது. என்று வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
தமிழில் முக்கியமான அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் இது வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.