மேலும் அறிய

மாண்புமிகு பறை படத்தின் இசை வெளியீட்டில் தொல் திருமாவளவன் உரை

அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை ".

சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை ". 

பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. 

தயாரிப்பாளர் முரளி பேசியதாவது

சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் என் அக்கா, அண்ணா, அவர்களால் இங்கு வரமுடியவில்லை, எங்கள் படத்தை வாழ்த்த வந்தவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் தேவா அவர்களுடன் பணிபுரிந்தது பெருமை. எங்களுக்கு என்ன தேவை என பார்த்துப் பார்த்து செய்து தந்தார். லியோ அருமையாக நடித்துள்ளார். விஜய் சுகுமாரிடம் பொறுமையும் அமைதியும் நிறைய உள்ளது. இணை தயாரிப்பாளர் நக்கீரன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எங்களுடைய மூன்று வருட கனவு, டிச்மபர் 12 படம் வருகிறது. எல்லோரும் திரையரங்கில் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.

இசையமைப்பாளர் தேவா பேசியதாவது

இந்த விழா ஆரம்பத்திலேயே களைகட்டி விட்டது. எழில் குழுவினர் கலக்கிவிட்டனர். முனுசாமி ஐயா அசத்திவிட்டார். விஜய் சுகுமாருக்கு இது முதல் படம் போலவே இல்லை, அட்டகாசமாக எடுத்துள்ளார். எல்லா கலைஞர்களும் அத்தனை அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். முரளி எனக்கு என்ன வேண்டுமோ அனைத்தையும் செய்து தந்தார். சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துக்கள். லியோ முதல் படத்தில் அழகாக நடித்துள்ளார். லியோனி மகன் என்பது மகிழ்ச்சி. நாயகிக்கும் எனது வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியா அரசு என்னைக் கௌரவப்படுத்தியது. நான் அங்கு சென்று 25 பேருக்குப் பறை இசை சொல்லித்தந்தேன் அதற்காகத்தான் அந்த மரியாதை செய்தார்கள். இப்படி ஒரு படத்திற்கு இசையமைத்தது எனக்குப் பெருமை. பறை இசைக்கு ஆந்தம் செய்துள்ளேன் அந்த ஆந்தமாக எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டும். நன்றி.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசியதாவது

மாண்புமிகு பறை இந்த தலைப்பே ரொம்ப அருமையான தலைப்பு. பறை இசைக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படத்தினுடைய தயாரிப்பாளர் சுபா அப்புறம் அவங்க சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துக்கள் இயக்குநர் இங்கும் பரபரப்பாகவே இருக்கிறார். படத்தை மிக அற்புதமாகவே உருவாக்கியுள்ளார். பாட்டுக்கு ஆடி இந்த விழாவைத் துவங்கி வைத்த எழில் குழுவுக்கு வாழ்த்துக்கள்,  ஒரு கலைஞர் கூட்டத்தில் இருக்க அவ்வளவு பேரையும் தன் பக்கம் கவர்ந்து தனக்காகக் கைதட்ட வச்ச ஒரு அற்புதமான ஒரு வாத்தியார் முனுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீகாந்த் தேவா ஒரு அருமையான இசையமைப்பாளர், தேசிய விருது வாங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி மிக அழகாகத் தமிழில் பேசி, பறை கலையின் அருமையைப் புரியவைத்தார். இசையமைப்பாளர் தேவா  அவர் தான் இப்படத்தின் பெரும் பலம். கர்நாடக சங்கீதத்திலும் மிகப்பெரிய வல்லமை உள்ளவர், இன்று  அவர் கர்நாடக சங்கீதத்துக்கு இணையாக படத்திற்கு இசையமைத்துள்ளார்,  இப்படம்   மிகப்பெரிய சங்கராபரணம் மாதிரி வெற்றி அடைய வேண்டும் வாழ்த்துக்கள்.  இந்த படத்துக்கு அவர்தான் உண்மையிலேயே ஹீரோ,  அதனால் அவருடைய பாட்டை பற்றி ஒரு தனி பட்டிமன்றம் போடலாம் என்று ஆசைப்படுகிறேன். படத்தில் டைட்டிலில் தன் பெயரைப்  போடுவதையே தனி ஸ்டைலாக்கி நம்மை ரசிக்க வைத்தவர் திரு பாக்யராஜ், ஒரு மாபெரும் திரைக்கதை மன்னன்  இந்த படத்துக்கு வாழ்த்து சொல்லியது பெரிய சந்தோஷம். சமூக நீதிக்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய  நான் மிகவும் நேசிக்கக் கூடிய என் அருமை சகோதரர் எழுச்சி தமிழர் தொல் திருமா அவர்கள்,  இந்த இசை வெளியீட்டுக்கு வருகை தந்தது,  எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. இந்த மாண்புமிகு பறை என்ற படம் டிசம்பர் 12 ஆம் தேதி  ரிலீஸ் ஆகிற்து. சூப்பர் ஸ்டாரோட ரசிகன் எங்க ஐயா தேனிசை தென்றல் தேவா என்று சொன்னார்கள். நான் அதை மாற்றிச் சொல்கிறேன். சூப்பர் ஸ்டாரோட ரசிகன் ஐயா இல்லை. தேவாவோட ரசிகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  சிங்கப்பூர் அதிபர், தேவாதி தேவா அப்படிங்கிற  நிகழ்ச்சிக்கு  வருகை தந்து,  தஞ்சாவூர் மண்ணை எடுத்து என்கிற பாட்டை,  நான் சாகும்போது இந்த பாட்டை போட்டுட்டுதான் நான் என்னுடைய உடலை அடக்கம் செய்யனும்னு சொன்னார் என்றால், தேவா அவர்கள்  இந்த உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்களைச் சம்பாதித்து உள்ளார்.  இந்த படத்தில் என் மகனை விட,  அவர்தான் இந்த படத்தினுடைய கதாநாயகன். இப்படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது

மாண்புமிகு பறை இசை வெளியீட்டு விழா என்பதை விட மாண்புமிகு பறை தமிழர் பண்பாட்டுக் கூடல் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு இனத்தின் பண்பாடு குறித்து
மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆற்றிய உரை நம்மை ஆழச் சிந்திக்க வைத்தது, சிலிர் பூட்டியது, இனி பேசுவதற்கு எதுவும் இல்லை நன்றி சொல்லி முடிக்கலாம் என்கிற அளவுக்கு, அண்ணன் லியோனி அவர்களின் பேச்சும், நம்முடைய தேனிசை தென்றல் அவர்களின் இசையுடன் கூடிய ஒரு இசையுரையும் இளம் இயக்குநர்களுக்கு நல்ல வழிகாட்டுதலைத் தந்து ஆணவக் கொலைக்கு எதிராக இப்படியும் சிந்திக்கலாம் திரைக்கதை அமைக்கலாம் என்று இங்கேயே ஒரு திரைக்கதை அமைக்கிற உரையை ஆற்றி அமர்ந்திருக்கிற அண்ணன் கே. பாக்ய ராஜ் அவர்களின் உரை, எல்லாவற்றையும் விடத் தம்பி சிவா அவர்களின் உரை, நம்முடைய கதாநாயகி அவர்களின் உரை எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நம்மை ஆட்டி வைத்தது, வியப்புக்குள்ளாக்கியது. பறை குறித்து நம்முடைய தமிழர் பண்பாடு எவ்வாறு இருந்தது நாகரிகம் அடைந்தது என்ற உரையாக இது அமைந்தது ஒவ்வொருவரும் ஆற்றிய உரைகள் பறை என்பது இன்றைக்கு ஒரு இழிவான சொல்லாக மாறி இருக்கிறது. அதனால் அந்த கருவியும் இழிவாகப் பார்க்கப்படுகிற சூழல் அமைந்துவிட்டது. அந்த கருவியால் ஒரு இனம் இழிவாகக் கருதப்படுகிறதா? அல்லது ஒரு இனத்தால் ஒரு சமூகத்தால் அந்த கருவி குறைத்து மதிப்பிடப்படுகிறதா ? என்று நமக்குத் தெரியவில்லை.ஆனால் இது ஆதி சிவன் அடித்த பறை என்று கவிஞர் சினேகன் அவர்களின் வரிகளில் அண்ணன் தேனிசை தென்றல் அவர்கள் அமைத்திருக்கிற இந்த பாடல் நம் கவனத்தை ஈர்த்தது.  மாண்புமிகு என்கிற பெருமைக்குரியது என்கிற வகையிலே இந்த திரைப்படத்திற்குப் பெயர் சூட்டி இருப்பது ஒரு துணிச்சலான செயல். போற்றுதலுக்குரிய செயல்.இயக்குநரின் துணிச்சலைக் கதை எழுதியவர்களின் துணிச்சலை நான் மனமாற பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் பறை என்பது ஒரு பொதுவான சொல் அனைத்து இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் மூலம் அதிலிருந்துதான் இசைக்கருவிகளின் வடிவங்கள் மாறி மாறி வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கின்றன.இந்த சமூகத்தின் மூலச்சமகம் தான் பறை என்கிற பெயரில் அழைக்கப்படுகிற சமூகம் இது ஒரு சமூக ஆய்வாளரின் கருத்து. ஒரு குலத்திலிருந்துதான் எல்லா குலமும் என்கிற போது தமிழ் சமூகத்தில் அந்த மூல சமூகம் ஆதி குளம் பறையர் குளம்தான் என்று அந்த வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள்.

பறை அடித்ததனால் பறையன் என்று பலரும் கருதுகிறார்கள் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை இன்றைக்கு நீங்கள் ஒரு கிராமத்திற்குப் போனால் பறையர் குடியிருப்புக்குப் போனால் 200 குடும்பங்கள் 300 குடும்பங்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 300 குடும்பங்களைச் சார்ந்தவர்களும் பறை அடிப்பதில்லை, அவர்களுக்குப் பறை பற்றி தொடர்பும் இருப்பதில்லை அந்த கிராமத்தில் சிலர்தான் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் பறையடிக்கிற ஒரு வழக்கத்தை வைத்திருப்பார்கள். எல்லா மக்களும் விவசாயத்தைச் செய்யக்கூடியவர்கள்தான். அவர்களுக்கு ஏரோட்ட தெரியும். நடவு நடத் தெரியும். அருப்புறுக்க தெரியும், தால் அடிக்க தெரியும். விவசாய பெருங்குடி மக்கள்தான். அந்த விவசாய பெருங்குடி மக்களை ஒட்டுமொத்தமாகப் பறையர் என்ற பெயரில் அழைத்து இழிவுபடுத்தி இருப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் இது குறித்து பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள் அதற்கு ஒரே காரணம்தான் இது மூலச் சமூகம் ஆதிச் சமூகம் அதிலிருந்து தோன்றுகிற ஒவ்வொரு புதிய சமூகமும் அதிலிருந்து தன்னை தனிமைப்படுத்தி அந்நியப்படுத்தி பிரிவுபடுத்தி காட்டிக் கொள்வதற்காக அந்த ஆதிசமூகத்தை இழிவுபடுத்துவதை ஒரு பண்பாடாக இங்கே வளர்த்திருக்கிறார்கள். அப்போதுதான் நாங்கள் அவர்களை விட மேலானவர்கள் என்று சொல்லுகிற அந்த நிலை வளர்ந்திருக்கிறது இது சமூக ஆய்வாளர்களின் கருத்து. பறை என்பதிலிருந்து பறையன் என்கிற ஒரு சமூகம் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவன் பயன்படுத்துவதனாலேயே அது இழிவான கருவி இழிவான பொருள் என்று பார்க்கிற ஒரு உளவியல் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் மாற்ற வேண்டும் பொது உளவியலில் இந்த இழுக்கு இருக்கிறது அதைத் துடைத்தெறிய வேண்டும் என்று தான் பெரியார் கனவு கண்டார் புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்டார் அதைத்தான் நாம் பேசுகிறோம். அந்த அரசியல் புரிதல் இருப்பதனால் தான் விஜய சுகுமாரன் இந்த படத்திற்கு மாண்புமிகு பறை என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லுவது போல் மாண்புமிகு பறை என்று சொல்லுகிற அந்த துணிச்சல் அது ஒரு அரசியல் புரிதலிலிருந்து மட்டும்தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு படத்தில் தம்பி சிவா போன்றவர்கள் இன்றைக்கு நடித்திருக்கிறார்கள் என்றால் அண்ணன் லியோனி அவர்களிடம் அவர் கற்றுக்கொண்ட அரசியலும் தான் அதற்கு அடிப்படை.  இந்த சாதிய கட்டமைப்பை எதிர்த்து நடத்திய யுத்தத்தின் எச்சங்கள், பதிவுகள் நாம இன்றைக்கு புதுசா பேசவில்லை.  இதை ஐயன் திருவள்ளுவனே இந்த சாதி அமைப்பு கூடாது என்ற ஆதங்கத்தை  வெளிப்படுத்தி இருக்கிறார். இது நீண்ட நெடிய ஒரு போராட்டமாக இருக்கிறது. அந்த போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் இன்றைக்கு நாம் மைய நீரோட்டத்தில் இணைக்கிற முயற்சி தான் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. திரைப்படங்களில் இன்றைக்குப் புதிதாக இது வரவில்லை திரைப்படங்களில் நீண்ட காலமாகவே இதற்கு எதிரான படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன. பழைய படங்களில் நிறையப் பாடல்கள் கூட இருக்கின்றன. அந்த பாடல்களை எல்லாம் இப்போது எடுத்து சமூக ஊடகங்களில் தோழர்கள் பரப்புகிறார்கள். ஆகவே இது ஒரு நீண்ட இடிய போராட்டம், அந்த போராட்டத்திலே திரைக்கலை ஆளுமைகள் தங்களையும் இணைத்துக் கொள்வது, அதற்காக தம்முடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவது, இதுபோன்ற படைப்புகளைக் கொண்டு வருவது, இதன் மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் சுகுமாரன் அவர்களை நெஞ்சார பாராட்டுகிறேன். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிற தம்பி சிவா அவர்கள் மிக அற்புதமாக உரையாற்றினார். அவருடைய உரையில் நல்ல ஒரு தெளிவு இருந்தது. அந்த தெளிவு அரசியல் புரிதலாக ஒரு நீண்ட கால அரசியல் தொலைநோக்கு பார்வை உள்ளதாக நான் புரிந்து கொள்கிறேன். இதுபோன்ற கலைஞர்கள் தான் திரைத்துறையைக் கையில் எடுக்க வேண்டும் பயன்படுத்த வேண்டும்.

இந்த திரைத்துறையை நாங்கள் முற்போக்கு சிந்தனை களமாகப் பயன்படுத்துவோம் என்கிற அந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்த திரைப்படத்தில் நாம் முழுமையாகப் பார்த்தால் தான் என்ன கதை கருப்பொருளாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த தலைப்பே நம்மை வியக்க வைக்கிறது. ஆழமா ஆள சிந்திக்க வைக்கிறது. அந்த வகையிலே இது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வைப்பதற்குத் தமிழ் சமூகம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்போம் என்பதை இந்த நேரத்திலே சொல்லி, எனக்கு இந்த அறிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் லியோனி அவர்களுக்கும் இயக்குநர் விஜய் சுகுமாரன் தம்பி சிவா போன்றவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

எல்லா இசையும் ஒன்று தான், ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும், புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை, அந்தப் பறை இசையின் பின்னணியை, வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக “மாண்புமிகு பறை” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் உருவாகியுள்ளார். 

இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார், காயத்ரி ரெமா நாயகியாக  நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக் ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.    

இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக  இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு அருமையான இசையை வழங்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.                          

தொழில் நுட்ப குழு 
கதை, திரைக்கதை: சுபா &சுரேஷ் ராம்         
இயக்கம் :எஸ்.விஜய் சுகுமார்
ஒளிப்பதிவாளர் :ரா. கொளஞ்சி குமார்
படத்தொகுப்பு :சி. எஸ். பிரேம் குமார்
இசை :தேனிசை தென்றல் தேவா
நடன இயக்குனர் :ஜானி
பாடல்கள் :சினேகன்         
கலை :விஜய் ஐயப்பன் 
தயாரிப்பு :சியா புரடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் :சுபா -சுரேஷ் ராம்
இணை தயாரிப்பு:ஜெ. எப். நக்கீரன் &கவிதா
நிர்வாக தயாரிப்பாளர் : த.முரளி
மக்கள் தொடர்பு - AIM  சதீஷ்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Embed widget