மேலும் அறிய

Cinema Round-up : வாரிசு இசை வெளியீட்டு விழா முதல் சூர்யாவின் ரசிகர்கள் சந்திப்பு வரை.. இன்றைய சினிமா ரவுண்ட்-அப் இதுதான்!

Cinema Round-up : இன்று, வெண்ணிலா கபடி குழுவில் நடித்த மாயி சுந்தர் காலமானார். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இத்துடன் டிரெண்டிங்கான மற்ற சினிமா செய்திகளை இங்கு காணலாம்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த வெண்ணிலா கபடி குழு நடிகர்

Cinema Round-up : வாரிசு இசை வெளியீட்டு விழா முதல் சூர்யாவின் ரசிகர்கள் சந்திப்பு வரை.. இன்றைய சினிமா ரவுண்ட்-அப் இதுதான்!

ரன், துள்ளாத மனமும் துள்ளும், மிளகாய், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மாயி சுந்தர். கடந்த 8 மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த மாயி சுந்தர் மண்ணார்குடியில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

வாரிசு இசை வெளியீட்டு விழா

 வாரிசு படத்தில் இருந்து  ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் டிசம்பர் 24 ஆம் தேதியான இன்று ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் நேற்று அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகளிடம் வழங்கப்பட்ட நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்மான சம்பவங்களை நிகழ்த்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக செல்லும் நிலையில் புகைப்படங்களும் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அருண் விஜய் 

நடிகர் விஜயகுமார் 1961 ஆம் ஆண்டு ஸ்ரீவல்லி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமான அவர் அதன் பின்னர், 1974 ஆம் ஆண்டு வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் வரிசையாக பல படங்களில் நடித்த அவருக்கு நாட்டாமை திரைப்படம் அக்மார்க் முத்திரையை கொடுத்தது என்று சொல்லலாம். தற்போது, விஜய்குமார்  உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று பல தகவல்கள் சூறாவளி காற்று போல் திரையுலக வட்டாரத்தை சுற்றி வந்தது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், அவரின் மகன் அருண் விஜய் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

 “எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும்.. அப்பா வீட்டில் ஆரோக்கியமாக இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்! உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி!” என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களை சந்தித்த சூர்யா

நடிகர் சூர்யா தமிழகம் முழுவதுமுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 42வது படம் முழுக்க முழுக்க வரலாற்று பின்னணியில் 3டியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தன் நடிகர் சூர்யா தமிழகம் முழுவதுமுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறபோவது யார்?

View this post on Instagram
 
A post shared by ᴏɴʟɪɴᴇ ᴅʜᴀɴᴀ ғᴀɴs ᴄʟᴜʙ (@odfc_fordhana)

இந்த வாரத்தில் ரச்சித்தா, மைனா நந்தினி, விக்ரமன், ஷிவின், கதிரவன், அஸிம், தனலட்சுமி ஆகியோர் எலிமினேஷன் நாமினிஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறைந்த ஓட்டுக்களை பெற்று, தனலட்சுமி கடைசி இடத்தில் உள்ளார். இதனால், தனலட்சுமிதான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என்ற பல தகவல்கள் பரவி வருகிறது. விக்ரமன் மற்றும் அஸிம் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். அதற்கு அடுத்து, ஷிவின், ரச்சிதா, கதிரவன், மைனா மற்றும் ரச்சித்தா ஆகியோர் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget