மேலும் அறிய

Varisu: ப்ளாக் பஸ்டரா.... ஆவரேஜா... சொல்லி அடித்தாரா விஜய்... வாரிசு பட வசூல் நிலவரம் இதுதான்!

இன்று முதல் பொங்கல் விடுமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் வரும் நாள்களில் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் ரிலீசாக ஜனவரி 11 அதிகாலை வெளியான வாரிசு படம்  குடும்பப் பாசம் - ஆக்ஷன் கலந்த கலவை என விழாக்காலத்த்துக்கு ஏற்ற வகையில் விஜய் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா,  பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, சம்யுக்தா என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

எவ்வளவு வசூலித்தது?

இந்நிலையில் வாரிசு படம் கடந்த மூன்று நாள்களில் மொத்தம் 48.15 கோடி ரூபாய் வசூல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 11ஆம் தேதி வெளியான அன்று உலகம் முழுவதும் 26.7 கோடி ரூபாய் வசூலித்தது வாரிசு. ஆனால் அடுத்த இரண்டு நாள்களில் 11.55 கோடி, 9.9 கோடி என சற்றே சரிந்தது.

ஆனால், இன்று முதல் பொங்கல் விடுமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் வரும் நாள்களில் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய நாளில் மொத்தம் 17 கோடி வரை வசூல் செய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கலவையான விமர்சனங்கள்

விமர்சனரீதியாக ’குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் ஒருபுறம் வாரிசு படத்தைப் பாராட்டி வரும் நிலையில், மறுபுறம் கணவன் எதை செய்தாலும் பெண்கள் பொறுத்துப்போக வேண்டும் என்ற  ஆதிகாலத்து கதையை எடுக்க இவ்வளவு பெரிய பட்ஜெட் தேவையா என்றும்  ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

”குடும்பம் முக்கியம் தான் என்றாலும் பெண்கள் வீட்டில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் பொறுத்து கொண்டு போக வேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை. பெண்களுக்கு நடக்கும் அனைத்து அநியாயங்களையும் பொறுத்து கொண்டு போக வேண்டும் என்பதை மார்டனாக இப்படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அது ரொம்ப தப்பான விஷயம். கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் குழந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் பொறுத்து கொள்ள வேண்டும் என்பது ஆதி காலத்து  வேல்யூ. 

இன்றைய தலைமுறையில் ஏராளமானவை மாறிவிட்டன. ஆனால் இப்படத்தில் பழைய சென்டிமென்டை புகுத்தி இருக்கிறார்கள். குடும்பம் என்பது ஜனநாயகமாக இருக்கு வேண்டும். ஆனால் ஏனோ படங்கள் அதை பற்றி பேசாமல் பொறுத்து போக வேண்டும் என்றே சொல்லி வருகிறார்கள். இதை சொல்வதற்கு இவ்வளவு பட்ஜெட்டில் படம் எடுக்க தேவையே இல்லை” என பெண் ஒருவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 

வாரிசு படத்தின் விநியோகஸ்தரான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், வாரிசு படம் “பொங்கல் வின்னர்” என்ற போஸ்டரை பகிர்ந்தது பேசுபொருளாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget