அஜித்தா? விஜயா? சூர்யாவா? போட்டிப்போடும் சேனல்கள்.! நாளை நடக்கிறது டிஆர்பி ஜல்லிக்கட்டு!!
மே 1 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தின் அறிவிப்பு தளபதி 66 மற்றும் சூர்யா 41 போன்ற படங்களின் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
![அஜித்தா? விஜயா? சூர்யாவா? போட்டிப்போடும் சேனல்கள்.! நாளை நடக்கிறது டிஆர்பி ஜல்லிக்கட்டு!! valimai, manadu movies are going to telecast in channels அஜித்தா? விஜயா? சூர்யாவா? போட்டிப்போடும் சேனல்கள்.! நாளை நடக்கிறது டிஆர்பி ஜல்லிக்கட்டு!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/29/8d15b488b972c7ce46c544d3b55a8eae_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதி பல்வேறு சேனல்கள் டிஆர்பியை ஏற்றுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சிம்புவின் மாநாடு போன்ற திரைப்படங்கள் ஒளிப்பரப்பாகவுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கமல்ஹாசன், தல அஜித், தளபதி விஜய், சூர்யா போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எப்போது திரைக்கு வந்தாலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. தியேட்டர்களின் வசூலை அள்ளிய சில படங்கள் சின்னத்திரையில் வெளியிட்டால் நிச்சயம் டிஆர்பி ரேட்டிங் இருக்கும் அல்லவா? அந்தவகையில் டிஆர்பியை ஏற்றுவதற்காக வருகின்ற மே1 ஆம் தேதியன்று பல முக்கிய திரைப்படங்களை திரையிடுவதற்கு பல்வேறு சேனல்கள் முன்வந்துள்ளனர். அவை என்ன? என்பது குறித்து இங்கே நாமும் தெரிந்துக்கொள்வோம்.
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தல அஜித், இயக்குநர் எச் வினோத், மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்த படம் வலிமை திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யும் விதமாக வெளியாகியது. வலிமை என்ற சொல்லிற்கு ஏற்றவாறு இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படத்தின் நாயகனாக வலம் வரும் அஜித், மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளை வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை நாயகன் மடக்கிப்பிடிப்பது தான் இப்படத்தின் மைய கதையாக அமைந்தது. சென்டிமென்ட், காதல், ஆக்சன் போன்ற பல்வேறு கலவைகளுடன் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியான இப்படம் பல எதிர்மறை கருத்துக்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்துள்ள்ளது. இப்படத்தை தான் வருகின்ற மே1 ஆம் ஜி தமிழில் ஒளிப்பரப்ப முடிவு செய்துள்ளது. இதனால் சேனலுக்கு ஒருபுறம் சந்தோஷம் இருந்தாலும், 2 மாதத்திற்குள்ளேயே படம் சின்னத்திரையில் வெளிவரவுள்ளதை நினைத்து சோகத்தில் உள்ளனர். இருந்தப்போதும் தலயின் படம் என்பதால் டிஆர்பியை எகிற வைப்பார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.
இதேப்போன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து சூர்யாவின் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சன்டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. அடுத்ததாக விஜய் டிவியில் சிம்புவின் மாநாடு திரைப்படமும் ஒளிப்பரப்பாகவுள்ளது. இப்படி மே தினத்தை முன்னிட்டு டிஆர்பியை ஏற்றுவதற்காக போட்டி போட்டிக்கொண்டு சேனல்கள் திரைப்படங்களை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.
மேலும் மே தினத்தை முன்னிட்டு அஜித் நடிப்பில் தயாராகி வரும் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே போல் தகவல் கமல் நடிப்பில் தயாராகியுள்ள விக்ரம் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதே போல் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தின் அறிவிப்பு தளபதி 66 மற்றும் சூர்யா 41 போன்ற படங்களின் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)