மேலும் அறிய

Vaathi Track List : பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.. கலக்கலான 5 பாடல்கள்.. வாத்தி அப்டேட் இதோ..! 

தனுஷ் நடிப்பில் 'வாத்தி' படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர்ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று ஆடியோ லான்ச் நடைபெறுவதால் ட்ராக் லிஸ்டை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த விவரத்தை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது. இதில் தனுஷூக்கு ஜோடியாக சம்யுக்தா  மேனன் நடிக்கிறார்.

Vaathi Track List : பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.. கலக்கலான 5 பாடல்கள்.. வாத்தி அப்டேட் இதோ..! 

ட்ரெண்டிங்கில் வாத்தி சாங்ஸ் :

நடிகர் தனுஷ் முதல்முறையாக ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தமிழ் இப்படம் 'வாத்தி' என்ற தலைப்பிலும் தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பிலும் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி பிரகாஷ் குமார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஸ்வேதா மோகன் பாடிய 'வா வாத்தி' பாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி இன்றளவும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதன் வெற்றியை தொடர்ந்து செகண்ட் சிங்கள் பாடலான 'நாடோடி மன்னன்' பொங்கல் ஸ்பெஷல் பாடலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வாத்தி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

வெளியானது ட்ராக் லிஸ்ட் :

வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. அந்த வகையில் வாத்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் லிஸ்டை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். மொத்தம் ஐந்து பாடல்களில் ஏற்கனவே 'வா வாத்தி' மாற்றும் 'நாடோடி மன்னன்' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து மீதம் இருக்கும் கலங்குதே, ஒன் லைஃப், சூர்ய பறவைகளே ஆகிய மூன்று பாடல்களை கேட்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். 2023ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியாகும் முதல் ஆல்பம் இதுவாகும்.  

வாத்தி ரிலீஸ் :

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படம், பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருந்த வாத்தி திரைப்படம் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget