Vaathi Release Date: இது மாஸ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்..
தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
![Vaathi Release Date: இது மாஸ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. Vaathi Dhanush Movie all set to hit the theaters on 17 Feb 2023 Vaathi Release Date: இது மாஸ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/7d481441e012c9733a2c57acc80e01b31668687681490224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகியிருந்தது. தொடர்ந்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வாத்தி படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வா வாத்தி பாடல் வெளியானது. தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்பாடல் பலரின் பேவரைட் ஆகவும் மாறி இருக்கிறது.
With renewed spirit, We will be bringing #Vaathi #SIRMovie to the theatres on 17 Feb 2023 ♥️#VaathiOn17Feb #SIROn17Feb@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts pic.twitter.com/LsfwlIw6X5
— G.V.Prakash Kumar (@gvprakash) November 17, 2022
முன்னதாக,படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்தாண்டு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் அது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாக வில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அந்தக்குழப்பத்தை தீர்த்து வைக்கும் விதமாக, வாத்தி படமானது அடுத்த வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)