Vaadivasal Update: மாஸான அப்டேட்... வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராஃபிக்ஸ் நிறுவனம்!
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் வாடிவாசல்.
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன் - சூர்யா முதன்முறையாக இணையும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் டெஸ்ட் வீடியோ ஷூட்டிங் காட்சிகளில் இருந்து ஒரு சீன் மட்டும் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் நீண்ட நாட்களாக தொடங்காமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது.
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் முதல் பாக ரிலீஸ் குறித்து மும்மரமாக பணியாற்றி வருகிறார். மற்றொரு புறம் நடிகர் சூர்யாவும் சிறுத்தை சிவா தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பிலும் பொருட்செலவிலும் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சூர்யா, வெற்றிமாறன் இருவரும் தங்கள் தற்போதைய படங்களை முடித்துவிட்டு விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தப் படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஹாலிவுட்டில் அவதார் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகள் அமைத்த வீட்டா நிறுவனம் வாடிவாசலில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டின் பிரம்மாண்டப் படங்களான அவெஞ்சர்ஸ், அவதார், டெட் பூல், கிங் காங் தொடங்கி புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' வரை இந்நிறுவனம் பணிபுரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#VaadiVaasal CG works to be done by the team @weta_digital, which worked in many H-wood biggies like #Avatar Avengers, Godzilla Vs Kong, etc., pic.twitter.com/mgIZ5I1M5I
— Abinesh (@SuriyaAbi6) January 29, 2023
வாடிவாசல் படம் குறித்த இந்த சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்தத் தகவலால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் காணப்படுகிறனர்.
சென்ற ஆண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சூர்யா மாடுபிடி வீரர்களிடம் ஏறு தழுவுதல் குறித்து பயிற்சி பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் முன்னதாகப் பகிரப்பட்டன.
முன்னதாக, ‘வாடிவாசல்’ படத்தை பற்றி பேசிய இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் பேசியிருந்த போது, “ வெற்றியும் நானும் நிச்சயமாக ஒரு வெற்றி கூட்டணி. இப்போது நாங்கள் வாடிவாசல் படத்திற்காக வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறோம். 2,3 பாடல்கள் ஆல்ரெடி கம்போஸ் செய்து முடித்து விட்டோம். ஒரு ராவானா, ஃபோக் மியூஸிக்காவும், ஃபோக்கோட எக்ஸ்ட்ரீமாவும் இசை இருக்கும். இதுமட்டுமல்லாமல் நேட்டிவ் சார்ந்த ஒரு ரஸ்டிக்கான மியூசிக்காக பாடல்கள் இருக்கும்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.