அமெரிக்காவின் டாப் 10 இந்திய படங்களில் கெத்து காட்டும் தமிழ் திரைப்படங்கள்!
அமெரிக்காவில் இதுவரையில் இந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் இருக்கும் டாப் 10 இடங்களை பிடித்துள்ள இந்திய படங்களின் லிஸ்ட் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விவரம் உள்ளே :
தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சியை நாம் தற்போது கண் முன்னே பார்த்து வருகிறோம். பான் இந்திய திரைப்படங்களாக நம்முடைய தென்னிந்திய சினிமாக்கள் சர்வதேச அளவில் பாராட்டை பெற்று வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் இந்திய திரைப்படங்களின் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது.
டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது.
நமது இந்திய மக்கள் உலகம் முழுவதிலும் வாழ்ந்து வருகிறார்கள். அதில் பெரும்பாலான சதவிகித மக்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். நமது இந்தியாவை அவர்கள் மிஸ் செய்தாலும் நமது இந்திய திரைப்படங்கள் மூலம் கனெக்ட்டில் இருக்க தவறுவதில்லை. நமது இந்திய திரைப்படங்கள் உலகளவில் திரையிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் இதுவரையில் இந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் இருக்கும் டாப் 10 இடங்களை பிடித்துள்ள இந்திய படங்களின் லிஸ்ட் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
View this post on Instagram
டாப் 10 இந்தியா படங்கள் 2022 :
டாப் 10 லிஸ்டில் $14 மில்லியன் வசூலித்து முதல் இடத்தை பிடித்துள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம். $7 மில்லியனோடு இரண்டாவதாக பிரம்மாஸ்திரா மற்றும் கே.ஜி.எஃப் 2. அடுத்ததாக $5.5 மில்லியன் வசூலித்து மூன்றாவதாக பொன்னியின் செல்வன் 1 திரைப்படம். இப்படங்களை தொடர்ந்து காஷ்மீரி ஃபைல்ஸ் $4 மில்லியன், லால் சிங் சத்தா $3 மில்லியன், கங்குபாய் கத்தியவாடி $3 மில்லியன், விக்ரம் $2.5 மில்லியன், பூல் புஹுலையா $ 2.5 மில்லியன் மற்றும் பீம்லாநாயக் $ 2 மில்லியன் வசூலையும் பெற்றுள்ளன.
Top 10 Indian films in USA in 2022: 🇺🇸#RRR: $14M#Brahmastra : $7M#KGF2: $7M#PS1: $5.5M*#KashmirFiles: $4M#LaalSinghChadda: $3M#GangubaiKathiawadi: $3M#Vikram: $2.5M#BhoolBhulaiyaa2: $2.5M#BheemlaNayak: $2M
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 13, 2022
டாப் 10ல் நமது தமிழ் திரைப்படங்கள் :
இந்த 2022ம் ஆண்டின் டாப் 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலில் நமது தமிழ் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன் 1 மற்றும் விக்ரம் திரைப்படம் இடம் பெற்று இருப்பது நமது தமிழ் சினிமாவுக்கு பெருமை. நமது தமிழ் திரைப்படம் வெளிநாடுகளில் இப்படி ஒரு வசூலை பெற்றிருப்பது ஒரு சாதனை.