நான் மணிக்கணக்கா ஹோட்டலில் காத்திருந்தேனா? - நடிகை ஊர்வசி ரவுடேலா - ரிஷப் பண்ட் மோதல்
பாலிவுட் நடிகையும், மாடலுமான ஊர்வசி ரவுடேலா தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் குறித்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா கருத்து கூறியதாக வெளியான வீடியோ கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
பாலிவுட் நடிகையும், மாடலுமான ஊர்வசி ரவுடேலா தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இவர் ரூ.20 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தன் திரையுலகில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒரு பிரபலமான கிரிக்கெட் வீரர் என்னை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்தார். முன்னதாக இதற்காகவே திட்டமிட்டிருந்தாலும் ஷூட்டிங், நிகழ்ச்சி போன்ற காரணங்களால் சோர்வாக இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.
Urvashi speaking about #RishabhPant 😅#UrvashiRautela pic.twitter.com/9c1rnXN1Ur
— 𝓚𝓞𝓜𝓐𝓛 𝓢𝓗𝓐𝓡𝓜𝓐 (@Komal_Sharma11) August 12, 2022
சந்திப்பு பற்றியும் மறந்து விட்டேன். ஆனால் அவர் எனக்கு 17 முறைக்கு மேலாக போன் செய்தார். ஆர்.பி. மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருந்ததால் திரும்ப அழைத்து மும்பை வந்ததும் சந்திப்போம் என தெரிவித்தேன். சொன்னபடி சந்தித்தேன். ஆனால் இந்த விஷயம் ஊடகத்தின் மூலம் தெரிந்து விட்டது. ஊர்வசி ரவுடேலா குறிப்பிட்டது பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தான் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. அவரின் நேர்காணல் வீடியோவும் வைரலானது.
இதற்கு பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டா ஸ்டோரியில் மக்கள் பிரபலமாகவும், தலைப்புச் செய்திகளில் இடம் பெறவும், நேர்காணல்களில் பொய் சொல்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும் என தெரிவித்தார். பின்னர் அதனை ரிஷப் பண்ட் நீக்கினார்.
View this post on Instagram
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஊர்வசி ரவுடேலா சோட்டு பையா பேட் பந்து விளையாட வேண்டும். நான் பிரபலமாகவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். இதனால் திரையுலகம், கிரிக்கெட் உலகம் இரண்டிலும் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பண்ட், ஊர்வசி இருவரும் டேட்டிங்கில் இருந்த நிலையில் பின்னர் மனக்கசப்பால் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்