Urfi Javed : அம்மாடி நீ பண்ணாலும் பண்ணுவ... உர்ஃபி ஜாவேத் ஆசை இதுவா... கொஞ்சம் தள்ளியே இருங்க பாஸ்...
நான் மனித தோலைப் பயன்படுத்தி ஒரு ஆடையை உருவாக்கினால் அது எவ்வளவு அருமையாக இருக்கும் - அடுத்த அவுட்ஃபிட் ஆசை குறித்து உர்ஃபி ஜாவேத் கொடுத்த அதிர்ச்சியான பதில்
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 24x7 பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது முதல் பாலிவுட்டின் சமீபத்திய ஃபேஷன் சென்சேஷனாக வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் எதை செய்தாலும் அது ஹிட். சைக்கிள் செய்ன், கோணிப்பை, கயிறு, மீன்வலை தொடங்கி தன் கையில் கிடைக்கும் எந்தப் பொருளையும் வீணாக்காமல் அதில் ஆடை தைத்து அணிந்து சமூக வலைதளங்களில் சூறாவளியாக செயல்பட்டு வருகிறார் உர்ஃபி.
டெனிம் ஜீன்ஸில் டப்ஸா?
அந்த வகையில் உர்ஃபி ஜாவேத் லேட்டஸ்ட் பேஷன் லுக் டெனிம் ஜீன்ஸ் பயன்படுத்தி ஒரு வித்தியாசமான லுக்கில் மும்பையில் உள்ள சிட்டி ரெஸ்டாரண்டில் காணப்பட்டார். இந்த உடை குறித்து அவர் கூறுகையில் " நான் அணிய வேண்டிய டாப்ஸ் சரியாக அமையாததால் உடனடியாக ஜீன்ஸைப் பயன்படுத்தி ஒரு டாப்ஸை உருவாக்கி அணிந்து கொண்டேன்" என்றுள்ளார்.
#urfijaved spotted in City 💃🔥😍 @viralbhayani77 pic.twitter.com/Sw82E36EG4
— Viral Bhayani (@viralbhayani77) January 31, 2023
அதிர்ச்சி பதில் :
மேலும் வேறு எந்த பொருளை வைத்து நீங்கள் இன்னும் ஆடையை வடிவமைக்கவில்லை என கேட்டபோது அதிர்ச்சியான ஒரு தகவலை கொடுத்துள்ளார் உர்ஃபி ஜாவேத். "நான் மனித தோலைப் பயன்படுத்தி ஒரு ஆடையை உருவாக்கினால் அது எவ்வளவு அருமையாக இருக்கும். யாராவது எனக்கு அவர்களின் மனித தோலைக் கொடுத்தால், நான் ஏன் அதை நிச்சயமாக உருவாக்கக்கூடாது" என்றார் உர்ஃபி ஜாவேத். அவரின் இந்த பதில் அனைவையும் அதிர்ச்சியில் உறையவைத்தது.
ட்ரோல்கள் எல்லாம் தூசிதான்:
என்ன தான் உர்ஃபி இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்தாலும் மற்றுமொரு பக்கம் ஏராளமான ட்ரோல்களுக்கு உள்ளாகிறார். இருப்பினும் அதை பற்றி கவலை படாமல் கடமையே கண்ணாக தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்து வருகிறார். அதே போல் தனது கருத்துக்களை முன்வைப்பதிலும் எந்த ஒரு தயக்கமும் காட்டாதவர் உர்ஃபி என்பது குறிப்பிடத்தக்கது.
#UrfiJaved talks about her controversy regarding #KanganaRanaut and #KritiSanon!#Bollywood #ZoomTV #ZoomPapz #CelebsSpotted pic.twitter.com/otXv9Pi1Tn
— @zoomtv (@ZoomTV) January 31, 2023
கங்கனா ரனாவத் பற்றி உர்ஃபி :
கங்கனா ரனாவத் மற்றும் உர்ஃபி ஜாவேத் இடையில் சமீபத்தில் ட்வீட் பரிமாற்றம் நடைபெற்றது. அது குறித்து உர்ஃபி ஜாவேத்திடம் கேட்டதற்கு நானும் கங்கனாவும் இப்போது பெஸ்டீஸ். அவர் மிகவும் நல்லவர். அவரை பற்றி நான் எதுவும் தவறாக கூற விரும்பவில்லை. நாங்கள் இருவரும் இப்போது நெருங்கிய நண்பர்கள் என்றார்