OTT-Theatre Releases: சினிமா ரசிகர்களே ரெடியா? ஓடிடி, தியேட்டரில் வரிசை கட்டும் படங்களின் லிஸ்ட்!!
OTT-Theatre Movie Releases April 2022: பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக காத்திருக்கின்றன.
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக காத்திருக்கின்றன. பீஸ்ட் முதல் ஜேஜிஎஃப் - 2 வரை இந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இதோ!
ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களை முதலில் பார்ப்போம்:
ராதே ஷ்யாம் - அமேசான் ப்ரைம் - ஏப்ரல் 1
கடந்த மார்ச் 11-ம் தேதி தியேட்டரில் வெளியான ராதே ஷ்யாம், ஏப்ரல் 1-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. பிரபாஸ், பூஜா ஹெக்டே ஆகியோரது நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், ஓடிடியில் வெளியாக இருக்கிறது
எதற்கும் துணிந்தவன் - சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ப்ளிஸ் - ஏப்ரல் 7
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, ப்ரியங்கா மோஹனன் நடிப்பில் கடந்த மார்ச் 10-ம் தேதி தியேட்டரில் வெளியான இப்படம் வரும் ஏப்ரம் 7-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
டாணாக்காரன் - டிஸ்னி + ஹாட்ஸ்டார் - ஏப்ரல் 8
விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டாணாக்காரன் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
Here we go, #TaanakkaranTrailer - https://t.co/MIGzKk5dec@iamVikramPrabhu @ianjalinair @GhibranOfficial @philoedit @madheshmanickam @directortamil77 @prabhu_sr @rthanga @Potential_st #டாணாக்காரன் #TaanakkaranFromApril8th
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 31, 2022
பீஷ்மா பர்வம் - டிஸ்னி + ஹாட்ஸ்டார் - ஏப்ரல் 1
அமல் நீரட் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான பீஷ்மா பர்வம் தியேட்டரில் வெளியாகி ஹிட்டானது. இப்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
தியேட்டரில் வெளியாக இருக்கும் படங்கள்:
மன்மதலீலை - ஏப்ரல் 1
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் மன்மதலீலை திரைப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. அஷோக் செல்வன், ஸ்ம்ரிதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் - ஏப்ரல் 13
மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் தியேட்டர் ரிலீஸ் படங்களில் ஒன்றான பீஸ்ட், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே செம ஹிட்டாகி இருக்கிறது.
#பீஸ்ட் #బీస్ట్ #ബീസ്റ്റ് #ಬೀಸ್ಟ್ #रॉ
— Sun Pictures (@sunpictures) March 26, 2022
From April 13th 🔥@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastFromApril13 #Beast pic.twitter.com/qwIOvTdbWW
கேஜிஎஃப் - 2 - ஏப்ரல் 14
யாஷ், சஞ்சய் தட் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் கேஜிஎஃப் - 2 ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வேற லெவல் ஹிட்டானதை அடுத்து, இரண்டாம் பாகத்தின் ரிலீஸூக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆச்சார்யா - ஏப்ரல் 29
டோலிவுட்டில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருக்கும் திரைப்படம் ஆச்சார்யா. சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் ஏப்ரல் 29-ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்