Director Vetrimaaran: ஓடிடி வருகை.. இனி தமிழ், மலையாளத்துல 500 க்கு மேல படங்கள் வரும்.. வெற்றிமாறன் பேச்சு..
தமிழில் இனி வருடத்திற்கு 600 படங்கள் வரை வெளியாகலாம் என்று இயக்குநர் வெற்றி மாறன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ எந்த ஒரு இயக்குநரும் அவர் சொல்ல விரும்பும் கதையை சொல்வார். எந்த ஒரு படமானாலும் அதை சொல்வதற்கு அதற்கே உரித்தான வழிமுறை இருக்கிறது. நீங்கள் சொல்ல விரும்பும் கதைக்கு கிராஃபிக்ஸ் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.ஆனால் அது உங்கள் பட்ஜெட்டுக்கு மீறி செல்கிறது என்றால், அப்போது நீங்கள் அந்த கதையை இப்போது சொல்ல வேண்டுமா என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.
அனிமேஷனில் பல மாயஜாலங்களை செய்த ஜேம்ஸ் கேமரூன், ஒரு படத்தை செய்ய 10 வருடங்களுக்கு மேல் காத்திருக்கிறார். அதற்கு காரணம் ஒன்று அவர் செய்ய நினைக்கும் படத்திற்கு சரியான பட்ஜெட் கிடைக்காமல் இருக்கும் அல்லது அவர் எதிர்பார்க்கும் டெக்னாலாஜி இல்லாமல் இருக்கும். அதன் பின்னர் அந்த டெக்னாலாஜியை உருவாக்கி,அவர் அந்தப்படத்தை இயக்குகிறார். அப்படித்தான் நீங்கள் சொல்ல நினைக்கும் கதையை சொல்ல வேண்டும். ஒரு படத்தை நீங்கள் இயக்கும் போது அதன் கதை அடுத்த பாகத்தின் நீட்சியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்ல நினைப்பதை அடுத்த பாகத்தில் சொல்லலாம்.
600 படங்கள் வரை வரும்
திரையரங்குகளுக்கு படம் எடுப்பது என்பது மிகவும் பழைய முறை. ஓடிடியின் இந்த வளர்ச்சிக்கு பிறகு, எந்த மொழி சினிமாவாக இருந்தாலும், வருடத்திற்கு 300 முதல் 400 படங்கள் வரை வரும். இன்னும் 2, 3 வருடங்களில் தமிழ், மலையாள மொழிகளில் வருடத்திற்கு 600 படங்கள் வரைக்கு வரலாம். திரையரங்கை பொருத்தவரை வருடத்திற்கு 50, 60, 100 வரை மட்டுமே இருக்கும். அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் அந்த நேரத்தில் இண்டஸ்டீரியில் கமர்ஷியல் வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களின் படங்களாக மட்டுமே இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.
வெற்றிமாறன் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் படத்தின் வேலைகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார்
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்