மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
நவ. 30-ஆம் தேதியன்று மக்களவையும், டிசம்பர் 2-ஆம் தேதியன்று மாநிலங்களவையும் கூட உள்ளதாக மத்திய அமைச்சர் கிர்ண் ரிஜிஜூ தகவல்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் மீண்டும் கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் கூட உள்ள மழைக்காலக் கூட்டத் தொடர்
ஜூலை-20 ஆம் தேதியன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட்-13 ஆம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டது. 100 நாட்களுக்கு மேலாக மக்களவை மற்றும் மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கூட்டத்தொடர் மீண்டும் கூட உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜஜூ அறிவித்துள்ளார்.
12 மசோதாக்கள் நிறைவேற்றம்
இந்நிலையில் வருகிற 30-ஆம் தேதியன்று மக்களவையும், டிசம்பர் 2-ஆம் தேதியன்று மாநிலங்களவையும் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இக்குறிப்பிட்ட காலப்பகுதியில் மொத்தமாக 19 அமர்வுகள் நடைபெற்றன. மேலும், இக்கூட்டத்தொடரின் போது மக்களவையில் 11 மசோதாக்களும், மாநிலங்களவையில் 2 மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 12 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த அவசரச் சட்டம், வருமான வரி திருத்த அவசரச் சட்டம் ஆகிய விதிகளை மாற்றி அமைத்து உள்ளடக்கிய இரண்டு மசோதாக்கள், இரு அவைகளாலும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























