ஹனீமூனையும் சேர்த்து ப்ளான் பண்ணிடுங்க..திருமணம் பற்றிய வதந்திக்கு த்ரிஷா காட்டம்
Trisha Marriage : நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவலுக்கு த்ரிஷா இன்ஸ்டாகிராமில் கடுமையாக பதிலளித்துள்ளார்

மாடலாக சினிமா கரியரைத் துவங்கி பின் பிரசாந்தின் ஜோடி படத்தில் துணை நடிகையாக சினிமாவிற்குள் வந்தவர் நடிகை த்ரிஷா. அமீர் இயக்கிய மெளம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இளைஞர்களின் மனதை கவர்ந்தார். அன்று தொடங்கி கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார் த்ரிஷா. குன்றாத அழகும் குறையாத மார்கெட்டும் என பிஸியாக இருந்து வருகிறார். கடைசியாக கமலின் தக் லைஃப் படத்தில் நடித்திருந்தார். த்ரிஷாவின் திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு நீண்ட காலமாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தாலும் த்ரிஷா திருமணத்தில் பெரிதாக நாட்டமில்லாதவராகவே இருந்து வருகிறார். அந்த வகையில் த்ரிஷாவின் திருமணம் பற்றி தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
த்ரிஷாவுக்கு திருமணமா ?
தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவுக்கும் சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாப்பிள்ளையை த்ரிஷாவின் பெற்றோர்கள் ஓக்கே செய்ததாகவும் இரு வீட்டாருக்கு நீண்ட நாள் பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து த்ரிஷா வீட்டுத் தரப்பினரிடையே எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் திருமணம் குறித்த தகவலுக்கு நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார்
திருமணம் பற்றிய வதந்திக்கு த்ரிஷா பதில்
தனது திருமணம் பற்றிய வதந்திகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படி பதிவிட்டுள்ளார். " என் வாழ்க்கை முடிவுகளை மற்றவர்கள் எனக்காக எடுப்பதை நான் எப்போதும் ரசிக்கிறேன். அடுத்து அவர்களே என் ஹனிமூனுக்கு சேர்த்து ப்ளான் போடுவதற்காக தான் காத்திருக்கிறேன்." என த்ரிஷா கடுமையாக பதிவிட்டுள்ளார் .
அண்மையில் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனின் போது த்ரிஷாவின் திருமணம் பற்றி அவரது கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் " எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அது நடந்தாலும் பரவாயில்லை , நடக்காவிட்டாலும் பரவாயில்லை" என அவர் பதிலளித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு த்ரிஷாவுக்கு தொழிலதிபர் வருன் மனியனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பின் நடிப்பது குறித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.





















