ஆடுகளத்தில் ஐரினாக வந்த த்ரிஷா.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்
ஆடுகளம் படத்தில் நடிகை திரிஷாவை வைத்து எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது .
ஆடுகளம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், வெற்றிமாறனின் இயக்கத்தில், ஜி. வி. பிரகாஷ் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனுஷ் , டாப்சி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் ஆடுகளத்தின் நாயகன் தனுசிற்கு சிறந்த நடிகர் விருதும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் என்று தங்கத்தாமரை விருதும் கிடைத்தது . வெற்றிமாறனுக்கு சிறந்த திரைகதைக்கான விருதும், நடன இயக்குநர் தினேஷ்குமாருக்கு சிறந்த நடன இயக்குநர் விருதும் கிடைத்தது .
டாப்சி கதாபாத்திரத்தில் முதலில் திரிஷா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் . த்ரிஷாவை வைத்து டெஸ்ட் ஷூட் எடுக்கப்பட்டு படம் தொடங்கும் நிலையில் நடிகை திரிஷா இந்த படத்தில் இருந்து மாற்றப்பட்டார் . அறிமுக நாயகியாக டாப்சி இந்த படத்தில் நடித்தார் . ஆங்கிலோ- இந்தியன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பார் நடிகை டாப்சி .சேவல் சண்டையை மய்யமாக வைத்து படம் முழுவதும் இருக்கும் . நட்பு, துரோகம், பொறாமை மற்றும் ஈகோ போன்ற மனித குணங்கள் நம் வாழ்வில் அழிவை ஏற்படுத்தும் என்ற கதைக்களத்தை தாங்கி இந்த படம் முழுவதும் நகரும் .
படத்தில் பாடல் தொடங்கி அனைத்துமே ஹிட் ஆனது தேசிய விருது தொடங்கி பல விருதுகளை படம் அல்லி சென்றது . இந்நிலையில் நேற்று நடிகர் சிம்புவின் கோ படத்திற்கான புகைப்படம் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது இதனை தொடர்ந்து தற்பொழுது த்ரிஷாவின் ஆடுகளம் புகைப்படமும் வெளியாகி வைரலாகி உள்ளது .ஆங்கிலோ இந்தியன் நாயகி போல மிக அழகா இருக்கிறார் .
படத்தின் சில முக்கியமான காட்சிகளில் திரிஷா நடிக்கும் பொது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அனைவரும் திரிஷா நடித்திருக்கலாமோ என்ற கேப்சன் உடன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் .
அடுத்த படத்தில் வெற்றிமாறன் , தனுஷ் மற்றும் திரிஷா கூட்டணியை காண ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது