மேலும் அறிய

Highly paid Heroines : நயன்தாரா விட்டதை அலேக்காக பிடித்த திரிஷா... கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள்

Highly paid Heroines : தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகைகள் யார் யார்?

தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கமே சிவகார்த்திகேயன், தனுஷ் என ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதிக்குள் கமல், விஜய், விக்ரம், ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா என பல நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. அதனால் இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஏறுமுகமாக இருக்கும் என்பது தெரிகிறது. 


பிளாக் பஸ்டர் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடிகர் நடிகைகளின் சம்பளமும் எகிறி வருகிறது. அந்த வகையில்  நடிகர்களுக்கு நிகராக நடிகைகளும் கோடிகளில் புரள்கிறார்கள். அப்படி டாப் லெவலில் சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகைகள் யார் யார் என்றும் அவர்கள் எவ்வளவு தொகை சம்பளமாக வாங்குகிறார்கள் என்பது குறித்தும் ஒரு சிறு தொகுப்பு. 

 

Highly paid Heroines : நயன்தாரா விட்டதை அலேக்காக பிடித்த திரிஷா... கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள்

 

ராஷ்மிகா மந்தனா : 

தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது 27 வயதாகும் இவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ஒரு படத்திற்கு 3 கோடியும் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க 4 கோடியும் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. மேலும் அதிக அளவிலான படங்களில் நடித்து வரும் நடிகையாகவும் வலம் வருகிறார். 

அனுஷ்கா ஷெட்டி :

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இடையில் அவர் நடிப்பதில் இருந்து விலகி தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் ஒரு படத்தில் நடிக்க 6 கோடியை சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. 

சமந்தா:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் சமந்தா மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட மயோசிட்டிஸ் பாதிப்பு  காரணமாக அதற்கு சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் பல படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ள சமந்தா நிச்சயம் மீண்டும் டாப் இடத்தை பிடிப்பார் என்பது அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. சமந்தா ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. 

Highly paid Heroines : நயன்தாரா விட்டதை அலேக்காக பிடித்த திரிஷா... கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள்


பூஜா ஹெக்டே : 

தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதை தொடந்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க அவர் சம்பளமாக 5 கோடி வரை பெறுகிறார் என கூறப்படுகிறது. 

ஸ்ரீநிதி ஷெட்டி  :

கே.ஜி.எஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. அதன் மூலம் ஏராளமான தென்னிந்திய ரசிகர்களை பெற்றார். தமிழில் விக்ரம் ஜோடியாக 'கோப்ரா' படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு சுமார் 7 கோடி வரை சம்பளமாக பெற்றார் என கூறப்படுகிறது.

நயன்தாரா :

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா இதுவரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவு வெற்றி பெற தவறியதால் அவரின் சம்பளமும் சரிந்துள்ளது. ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். பாலிவுட்டில் அதிக அளவிலான பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. ஜவான் படத்திற்காக 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. 

Highly paid Heroines : நயன்தாரா விட்டதை அலேக்காக பிடித்த திரிஷா... கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள்


திரிஷா :

பொன்னியின் செல்வன், லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் அஜித், கமல் ஜோடியாக  நடித்து வருகிறார். அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் திரிஷா 10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளமாக பெற்று முதல் இடத்தில் உள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Sai Pallavi:
Sai Pallavi: "என்னோட Support உங்களுக்கு இருக்கும்.." நடிகர் தனுஷின் அரசியல் வருகைக்கு சாய் பல்லவி ஆதரவு
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
Dhanush OM Audio Launch 2026: தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
Sandiyar:
Sandiyar: "சண்டியர்" அவதாரம் எடுத்த கமல்ஹாசன்! 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே டைட்டில்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஏன் வைதீக முறைப்படி பேத்தி கல்யாணம் நடந்தது?" - துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.. சொன்ன காரணம் என்ன?
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Dhanush OM Audio Launch 2026: தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Embed widget