Tom Cruise Birthday: தன் சாவை சட்டைப்பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்.. டாம் க்ரூஸின் அசாத்திய ஸ்டண்ட்ஸ்
ஹாலிவுட் திரைப்படத்தின் கடைசி ஆக்ஷன் ஹீரோ என்று கருதப்படும் நடிகர் டாம் குரூஸ் இன்று தனது 61-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்
![Tom Cruise Birthday: தன் சாவை சட்டைப்பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்.. டாம் க்ரூஸின் அசாத்திய ஸ்டண்ட்ஸ் Tom Cruise Birthday Tom Cruise Jaw Dropping Stunts Mission Imposible Bike Stunt Video Inside Tom Cruise Birthday: தன் சாவை சட்டைப்பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்.. டாம் க்ரூஸின் அசாத்திய ஸ்டண்ட்ஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/03/1245d5f90d03630daea6a21f4c1a6a531688384625329572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஹாலிவுட்டின் கடைசி ஆக்ஷன் ஹீரோ என்று கருதப்படும் டாம் க்ரூஸின் பிறந்த நாள் இன்று தனது 61-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கிட்டதட்ட 40 ஆண்டுகளாக ஹாலிவுட் திரையுலகின் நிகரில்லாத ஆக்ஷன் ஹீரோவாக இருந்துவருகிறார் டாம் குரூஸ். தனது படங்களுக்கு தானே ஆபத்துகள் நிறைந்த ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது டாம் குருஸின் ஹாபி என்றே சொல்லலாம். விமானத்தில் தொத்திக்கொண்டு போவது, மலையிலிருந்து பைக் ஓட்டிக்கொண்டே குதிப்பது என தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய சாதனையை செய்து வருகிறார் டாம் குரூஸ். அவரது படங்களில் அவர் செய்த ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளின் தொகுப்பு இது.
மிஷன் இம்பாஸிபள் தி ஃபால் அவுட்
மிஷன் இம்பாஸிபள் தி ஃபால் அவுட் திரைப்படத்தின் ஒரு காட்சியில் மிக வேகமாக ஓடி ஓடி ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவும் காட்சியில் டாம் குருஸ் நடித்தபோது அவரது காலை உடைத்துக்கொண்டார்.
‘I knew instantly my ankle was broken and I really didn't want to do it again so just got up and carried on with the take.’#TOMCRUISE talks about breaking his ankle in this scene in MISSION IMPOSSIBLE: FALL OUT (2018).pic.twitter.com/2VPPsXyNlw
— Nitesh Naveen (@NiteshNaveenAus) February 12, 2023
மிஷன் இம்பாஸிபள் தி ஃபால் அவுட்
அதே படத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் தொற்றிக்கொண்டு வரும் காட்சியையும் தானே செய்திருந்தார் டாம் குரூஸ்.
That scene of the HALO jump in MISSION IMPOSSIBLE FALLOUT going around is funny to me since they did all that for real just to ruin it with CGI. It's a waste!
— VyceVictus (@VyceVictus) April 5, 2022
Especially since the real showstopper is Tom Cruise going from a high-alt rope stunt right into a helicopter dogfight pic.twitter.com/by0dRaNftZ
ஆறு நிமிடம் மூச்சை அடக்கினார் டாம் குருஸ்
மிஷன் இம்பாஸிபள் பிரான்சைஸில் வெளிவந்த ரோக் நேஷன் திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக தண்ணீருக்கு அடியில் ஆறு நிமிடம் 30 நிமிடங்களுக்கு தனது மூச்சை அடக்கினார் டாம் குருஸ்.
6 minutes.
— france.tv cinéma (@francetvcinema) July 2, 2023
C'est la durée pendant laquelle Tom Cruise a réussi à rester en apnée, pour le tournage de cette scène de
« Mission : Impossible - Rogue Nation ». 😱
Le film de Christopher McQuarrie est à (re)découvrir ce soir à 21.10 sur @France2tv. pic.twitter.com/gpiTGzV8k5
விமானத்தில் தொத்திக்கொண்டிருப்பது
அதே படத்திற்காக ஓடும் விமானத்தில் எந்த வித கிராஃபிக்ஸும் இல்லாமல் தனது கைகளால் பிடித்து நடித்தார் குருஸ்
TOM CRUISE is 61 years old today! This is him in MISSION: IMPOSSIBLE - ROGUE NATION before and after digital effects: dangling on a plane 5000ft in the air, attached by one strap. pic.twitter.com/AEGbxD5les
— All The Right Movies (@ATRightMovies) July 3, 2023
பைக்கில் மலைச்சரிவில் இருந்து குதிப்பது
தற்போது வெளியாக இருக்கும் மிஷன் இம்பாஸிபள் தி டெத் ரெகனிங் திரைப்படத்தில் பைக் ஒன்றை ஓட்டிக்கொண்டு மலைச் சரிவில் இருந்து குதித்து சாதனை செய்திருக்கிறார் டாம்
Felices 61 Tom Cruise.
— R E P L I C A N T (@Roybattyforever) July 3, 2023
Cuantos más cumples, más locuras increíbles haces.
Por muchos más.pic.twitter.com/33J40htq5n
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)