Today new releases: நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை.. இன்றைக்கு ரிலீசாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
Today new releases : இன்று (டிசம்பர் 22) திரையரங்கில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ
ஒவ்வொரு வாரமும் புது புது திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க...
சலார் 1:
கேஜிஎஃப் 2 படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அதன் வெற்றியை தொடர்ந்து ஹம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அதிக அளவிலான பொருட்செல்வவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'சலார்'. நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 22ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது.
சபாநாயகன் :
அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் சபாநாயகன். இப்படத்தில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார் மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி நடிப்பில் வெளியான கடைசி படம் இதுவாகும். பள்ளி, கல்லூரி நாட்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் மிகவும் ஜாலியான ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது.
ஜிகிரி தோஸ்த் :
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அறன் எழுதி, இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'ஜிகிரி தோஸ்த்'. ஷாருக்கான், அம்மு அபிராமி, பவித்ர லக்ஷ்மி, சிவம், அனுபமாகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
ஆயிரம் பொற்காசுகள் :
ரவி முருகையா இயக்கத்தில் நடிகர் விதார்த் மற்றும் நடிகர் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஆயிரம் பொற்காசுகள்'. மேலும் இப்படத்தில் அருந்ததி நாயர், வெர்டிவல் ராஜா, பாரதி கண்ணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமத்து மக்களின் கதையை பிரதிபலிக்கும் ஒரு எதார்த்தமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையாங்கில் வெளியாகி உள்ளது.
இது தவிர வேறு சில படங்களும் டிசம்பர் 21ம் தேதியான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
டங்கி :
பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், தியா மிர்ஸா, சதீஷ் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 21ம் தேதியான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நேரு :
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் மலையாளத்தில் நேற்று வெளியான திரைப்படம் 'நேரு'. மோகன்லால், பிரியாமணி, சாந்தி மாயாதேவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.
அக்வாமேன் :
இயக்குநர் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் ஜேசன் மோமோவா, அம்பர் கேர்ட், பாட்ரிக் வில்சன் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் 'அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்' திரைப்படம். டிசி காமிக்ஸ் என காமிக் புத்தகத்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கபட்ட இப்படம் நேற்று வெளியானது.