மேலும் அறிய

Thunivu Second Single: ’காசேதான் கடவுளடா’; வருகிறது துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள்..ஜிப்ரான் ட்வீட்!

Thunivu Second Single: பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஜித் நடிப்பில் வரும் பொங்கலன்று வெளியாகவிருக்கும் படம் துணிவு. H.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில்,  துணிவு படத்தின் அடுத்த சிங்கிள் பாடலுக்கான ஹிண்ட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிப்ரான் கொடுத்துள்ளார். 

ஜிப்ரான் ட்வீட்:

துணிவு படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. பட வேளைகள் முடிய முடிய, படக்குழுவும் துணிவு படத்தின் அப்டேட்டுகளை கொடுத்த வண்ணம் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், ரசிகர்களுக்கு வாக்கு கொடுத்தது போலவே, சில்லா சில்லா பாடலையும் குறித்த நாளுக்குள் கொடுத்து அனைவரையும் உற்சாகப்படுத்தினர், துணிவு படக்குழுவினர். இந்நிலையில், துணிவு படத்திற்கான அடுத்த பாடலின் பெயரை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். காசேதான் கடவுளடா என்ற ஹேஷ்டேக்கை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

பொங்கலுக்கு ரிலீஸ்:

வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.  ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 


Thunivu Second Single: ’காசேதான் கடவுளடா’; வருகிறது துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள்..ஜிப்ரான் ட்வீட்!

முன்னதாக, துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் டைட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, நடிகர் அஜித்தின் புகைப்படங்களும் படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வைரலாக்கப்பட்டது. இதையடுத்து, துணிவு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. 

துணிவு Vs வாரிசு:

விஜய் நடிக்க, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடப்பள்ளி இயக்கும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, ஷ்யாம், சரத்குமார் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்த திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என முன்னரே தெரிவிக்கப்பட்டுவிட்டது. துணிவு படமும் பொங்கலின் போது வெளியாகவுள்ளதால், இரண்டு படங்களுக்குமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் கூடி வருகிறது. 

15 மில்லியனை எட்டிய சில்லா சில்லா!

ஜிப்ரானின் இசையில் முன்னர் வெளியான சில்லா சில்லா பாடல், யூடியூபில் 15 மில்லியன் வியூஸ்களை எட்டியது. இது குறித்த பதிவையும் இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டிருந்தார்.

”எப்படியிருக்குமோ”  என ரசிகர்கள் எதிர்பார்த்த சில்லா சில்லா பாடல், நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, செகண்ட் சிங்கிளுக்கான ஹைப்பும் தற்போது எகிறி வருகிறது. வங்கி கொள்ளையை மையக்கதையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில்,  ‘காசேதான் கடவுளடா’ என்ற பெயரில் பாடல் இடம் பெற்றுள்ளது ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டி வருகிறது. இந்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ட்விட்டர், இன்ஸ்டா என அத்தனை சமூக வலைதளங்களிலும் கேள்வி கேட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget