Thunivu Latest Stills: என்ன ஆரம்பிக்கலாமா.. மிரட்டும் லுக்கில் அஜித்.. வைரலாகும் துணிவு புகைப்படங்கள்!
துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷ கடலில் மூழ்கடித்துள்ளது!
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, படத்தின் கதாநாயகியும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையுமான மஞ்சு வாரியர் ஜிப்ரான் இசையமைப்பில் துணிவு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியானது.
இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பஞ்சாபில் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதால் அதிரடி ஆக்சன் கலந்து கதையாக துணிவு இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறனர்.
#Thunivu #AK cool new stylish pics pic.twitter.com/XaTaGLc5zI
— Rajasekar (@sekartweets) December 4, 2022
இந்த நிலையில் படத்தில் இருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
துணிவு திரைப்படத்திற்காக தாடியுடன் வலம் வந்த நடிகர் அஜித், சமீபத்தில் கிளீன் சேவ் செய்து இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அஜித்தின் அடுத்த திரைப்படமான Ak62 விற்கு அவர் தயாராகுவதால், அவரது தோற்றத்தை மாற்றி உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். AK 62 திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில், இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
ஏகே 62 காமெடியுடன் கலந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும், இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பவர் யார் என்று எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.