மேலும் அறிய

OTT Movie Release: அடேங்கப்பா! இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? பாப்கார்ன் எடுங்க ரசிகர்களே!

This week OTT release : இந்த வாரம் செப்டம்பர் 29ஆம் தேதி ஓடிடி தளத்தில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன.

ஒவ்வொரு வாரமும் திரையரங்க ரிலீசுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த ஓடிடியில் என்ன மொழி படங்கள் வெளியாகின்றன என்ற படங்களின் பட்டியலை பார்க்கலாம். 

இந்த வாரம் செப்டம்பர் 29ம் தேதி அன்று ஓடிடி தளங்களில் எக்கச்சக்கமான திரைப்படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா...

OTT Movie Release: அடேங்கப்பா! இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? பாப்கார்ன் எடுங்க ரசிகர்களே!

குஷி (தெலுங்கு) : 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷிவ நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தா நடித்த 'குஷி ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

ஜெயராம், சச்சின் கெடேகர், ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ஸ்ரீகாந்த் ஐயங்கார் மற்றும் சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29ம் தேதி முதல் வெளியாகவுள்ளது. 

கிக் (தமிழ் ) :

'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்துக்கு பிறகு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள காதல் கலந்த முழு நீள காமெடி திரைப்படம் 'கிக்'. கன்னடத்தில் வெளியான 'ஜூம்' படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். தான்யா ஹோப், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29ம் தேதி முதல் வெளியாக உள்ளது. 

ஹர்காரா (தமிழ்) :

150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தபால்காரரையும் சமகாலத்தில் தபால்காரராக மலை கிராமத்துக்கு வரும் காளி வெங்கட்டையும் இணைக்கும் ஒரு வித்தியாசமான கதைக்களம் தான் ஹர்காரா. ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஜெயபிரகாஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, கவுதமி சௌதிரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. 

அடியே (தமிழ்) :

டைம் டிராவலை மையமாக கொண்டு விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், கவுரி கிஷன் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'அடியே' திரைப்படம் சோனி லிவ் ஓடிடி  தளத்தில் செப்டம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. 

OTT Movie Release: அடேங்கப்பா! இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? பாப்கார்ன் எடுங்க ரசிகர்களே!

கிங் ஆஃப் கோதா (மலையாளம்) :

மாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷியின் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ரிக்கிதா சிங், ஐஸ்வர்யா லக்ஷ்மி,  செம்பன் வினோத், ஷபீர், நைலா உஷா, ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, பிரசன்னா, கோகுல் சுரேஷ், அனிகா சுரேந்திரன், சரண் சக்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. 

மேலும் சில படங்கள் செப்டம்பர் 29ம் தேதி முதல் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. 

ஏஜென்ட் (தெலுங்கு) - சோனி லிவ் 

டர்ட்டி ஹரி (தெலுங்கு) - ஆஹா 

Reptile (ஆங்கிலம்) - நெட்ப்ளிக்ஸ் 

சூனா (இந்தி) - நெட்ப்ளிக்ஸ் சீரிஸ் 

Nowhere (ஸ்பானிஷ்) - நெட்ப்ளிக்ஸ் 
 
ஐ கில்டு பாபு (இந்தி) - ஜீ 5 

எண்ணிவர் (மலையாளம்) - சைனா பிளே 

ஜான்வி (மலையாளம்) - ஹெச் ஆர் பிளே 
  
பாப்பம் பாசிவடு (தெலுங்கு) - ஆஹா சீரிஸ் 

குமாரி ஸ்ரீமதி (தெலுங்கு) - ப்ரைம் சீரிஸ் 

Love Is In The Air (ஆங்கிலம்) - நெட்ப்ளிக்ஸ் 

Encounters (ஆங்கிலம்) - நெட்ப்ளிக்ஸ் சீரிஸ் 

Forgotton Love ( போலிஷ்) - நெட்ப்ளிக்ஸ் 

தும்சே நா ஹோ பயேகா (இந்தி) - ஹாட்ஸ்டார்

சார்லி சோப்ரா (இந்தி) - சோனி லிவ் சீரிஸ்

Angshuman MBA (பெங்காலி) - ஜீ 5 
  
தி டெவில்ஸ் பிளான் (கொரியன்) - நெட்ப்ளிக்ஸ் சீரிஸ் 

அவலக்கி பவளக்கி ( கன்னடம்) - சினி பசார் 

கிராந்திவீரா (கன்னடம் ) - சினி பசார் 

கொரோனா தவான் (மலையாளம்) - சைனா பிளே 

ஹாஸ்டல் டேஸ் S4 (இந்தி) - ப்ரைம் சீரிஸ் 

சாக்ஷியும் சந்தகுந்தலாவும் (மலையாளம்) - சிம்ப்ளி சவுத்   
  
இப்படங்கள் அனைத்தையும் வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் ஓடிடி தளங்களில் கண்டு ரசிக்கலாம்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Embed widget