‛மாடு மேய்ச்சு அந்த காசுல படம் பார்த்தேன்’ - இயக்குனர் தங்கர் பச்சான் ஓபன் அப்!
"காசு திருடிட்டு போவேன். எங்க ஊருல ஒரு வழக்கம் ஒன்னு இருக்கும் யாருடைய வயல்லயாவது....."
மண்வாசம் வீசும் கிராமத்து கதைகளை உயிரோட்டத்துடன் கொடுத்தவர் தங்கர் பச்சான். அழகி , சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் , ஒன்பது ரூபாய் நோட்டு என பல உருக்கமான படங்களை கொடுத்தவர் தங்கர் பச்சான்.
View this post on Instagram
இவர் சமீபத்திய நேர்காணலில் இளம் வயதில் படம் பார்ப்பதற்காக தான் செய்த குறும்பான வேலைகள் குறித்து நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
தங்கர் பச்சான் பகிர்ந்துக்கொண்டதாவது :
”என்னுடைய காலக்கட்டத்தில் 20 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களில் அதிக சினிமா பார்த்தவன் நானாகத்தான் இருப்பேன். படம் பார்க்க நான் வீட்டில் இருந்து காசு திருடிட்டு போவேன். எங்க ஊருல ஒரு வழக்கம் ஒன்னு இருக்கும் யாருடைய வயல்லயாவது மாடு மேய்ந்தது என்றால் , அந்த மாடை பிடித்துக்கொண்டு பொதுக்கொட்டகை ஒன்றில் கட்டிவிடுவாங்க. அது அரசுக்கு கீழே இயங்கும் கொட்டகை. அங்கு மாட்டுக்காரரிடம் ஒரு தொகையை வசூலித்து மீண்டும் மாட்டை ஒப்படைப்பாங்க. அந்த வேலையை நான் நண்பர்களுடன் இணைந்து வேண்டுமென்றே அந்த வேலையை செய்து பணம் வாங்கி சினிமா பார்க்க போவோம். அது தவிர அங்கு இருக்கும் முந்திரி காடுகளில் முந்திரி கொட்டைகளை எடுத்து , அதில் வரும் காசுகளை எடுத்துக்கொண்டு படம் பார்க்க செல்வோம் அந்த நினைவுகளை எல்லாம் எனது அடுத்த படத்தில் வைத்திருக்கிறேன்“ என தெரிவித்தார் தங்கர் பச்சான்.
View this post on Instagram