Harshika Poonacha: "அஜித் பெயரில் ஒரு பவர் இருக்கு.. கனவு கனவு கனவு.." ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த கன்னட நடிகை..
அஜித்துடன் நடிப்பது எப்போது நடக்கும் என தெரியவில்லை பிரபல கன்னட நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
அஜித்துடன் நடிப்பது எப்போது நடக்கும் என தெரியவில்லை. யாராவது என்னை அவருடன் நடிக்க ஒப்பந்தம் செய்யவேண்டும் என பிரபல கன்னட நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசிய போது “அஜித்தின் பெயரிலேயே ஒரு பவர் இருக்கிறது. அவருடைய ரசிகையாக இருப்பதே எனது பலம். அஜித்துடன் நடிப்பது எனது வாழ்நாள் கனவு. அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.” என்று பேசினார்
மேலும் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “ ஆனால் அது எப்போது நடக்கும் என தெரியவில்லை. என்னை அவருக்கு எதிராக நடிக்கை வைக்கப் போவது யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இது என்னுடைய கனவு. அந்தக் கனவு விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
But don't know when it will happen . Neither I know anybody from the Tamil industry who can cast me opposite to #thala . Neither I have any connections. It's a dream for me aswell. Hope it comes true soon.
— Harshika Poonacha (@actressharshika) February 7, 2022
Dream to work with #Thala .
It's my Dream Dream Dream https://t.co/bp3vggGPrb
கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹர்ஷிகா பூனாச்சா, 2008 ஆம் ஆண்டு பியூசி படம் மூலம் கன்னட திரையுலகத்திற்கு அறிமுகமானார். கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் உன் காதல் இருந்தால் திரைப்படத்தில் நடித்த இவர், அண்மையில் மறைந்த, நடிகர் புனித் ராஜ்குகாருடன் ‘ஜாக்கி’ படத்தில் நடித்திருந்தார்.
View this post on Instagram
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள அஜித்தின் வலிமை திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத்துடனேயே இணையவுள்ளார்.