கருப்பு ரிலீஸ் ஆவதில் சிக்கல்?.. சூர்யாவுக்கு வந்த சோதனை.. பெயரை மாற்றிய இயக்குநர்
சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு சூர்யாவிற்கு பக்கா கமர்ஷியல் படமாக கருப்பு அமைந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. டீசரை பார்த்த பலரும் இப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என சினிமா கருத்தாளர்கள் கணித்துள்ளனர். படத்தின் டீசரில் ஒரு பெண்ணின் கை மட்டும் தெரிவது போன்ற காட்சியும் கவனத்தை பெற்றிருக்கிறது.
கவனத்தை பெற்ற கருப்பு டீசர்
லியோ, விடாமுயற்சி, தக் லைஃப் என முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் த்ரிஷா கருப்பு படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. நிச்சயம் இப்படத்தில் அவரது கதாப்பாத்திரம் கவனத்தை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசரில் வக்கீலாக இருக்கும் சூர்யா மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காக அவ்வப்போது வேட்டை கருப்பு சாமியாக மாறி தீயவர்களை அழிப்பது போல கதையை ஆர்.ஜே.பாலாஜி அமைத்திருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி பெயர் மாற்றம்
ஆர்.ஜே.பாலாஜி என்ற பெயரை சுருக்கி ஆர்.ஜே.பி எனவும் கருப்பு படத்தின் மூலம் மாற்றிக்கொண்டார். இதற்கான காரணத்தையும் அவரே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். நடிகை ஊர்வசி சொல்லித்தான் ஆர்.ஜே.பாலாஜி என்ற பெயரை ஆர்.ஜே.பி என மாற்றிக்கொண்டேன். இந்த பெயரை இப்படி வைத்தவர்கள் பலரும் பிரபலமடைந்துள்ளனர் என்றும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார். மேலும், கருப்பு படத்தின் டீசர் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தை வாங்கி வெளியிடும் உரிமையை பெற பலரும் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
ஓடிடி உரிமை விற்பனையில் தாமதம்
தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டாலும், ஓடிடி நிறுவனம் இதுவரை கருப்பு படத்தை வாங்க முன்வரவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது. ஓடிடி உரிமை இன்னும் வியாபாரம் ஆகாததால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது. சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா, ரெட்ரோ போன்ற படங்கள் பாக்ஸ் ஆஃபிஸிலும் சரி ஓடிடி தளங்களிலும் சரி பெரிய அளவில் கவனத்தை பெறவில்லை. தோல்விப்படமாகவே கருதப்படுகிறது. இதனால், ஓடிடி நிறுவனங்கள் கருப்பு படத்தை பெரிதாக எதிர்பார்க்கவில்லையாம். சூர்யா படத்திற்கே இந்த நிலைமையா என ஒரு பக்கம் படக்குழு புலம்புகிறது. ஓடிடி உரிமை விற்பனை ஆகாததால் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருக்கிறது.






















