Highest Paid OTT Actors: ஓடிடியில் கோடிகளில் சம்பளம்.. பட்டியலில் சமந்தா, விஜய் சேதுபதி.. முதலிடம் எந்த நடிகர் தெரியுமா?
Highest Paid Actors in OTT Platforms: ஓடிடி தளத்தில் அதிக அளவிலான சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியல் இதோ!
Highest Paid Actors in OTT: சினிமாக்கள் திரையரங்கைத் தாண்டி, அடுத்தக் கட்டத்தை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்து மக்களை ஓடிடி வழியே கட்டிப் போட்டு வருகிறது. திரையரங்க ரிலீஸூக்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரும்பும் படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி குடும்பத்துடன் பார்த்து ரசிப்பது தான் இன்றைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்.
திரைப்படங்கள் மட்டுமின்றி ஓடிடி தளங்களில் வெளியாகும் இணைய தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் ஏராளமான நடிகர் நடிகைகளும் ஓடிடி படங்களில் நடிக்க விருப்பம் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு சம்பளமாக பெரிய அளவில் சம்பளமும் வழங்கப்படுகிறது. அப்படி ஓடிடி தளம் மூலம் அதிக அளவில் சம்பளம் வாங்கும் பிரபலமான இந்திய நடிகர்கள் குறித்துப் பார்க்கலாம்.
அஜய் தேவ்கன் :
‘ருத்ரா : தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்’ என்ற ஏழு எபிசோடுகள் கொண்ட இணைய தொடரில் நடித்திருந்தார். அந்தத் தொடரின் ஒரு எபிசோடில் நடிக்க அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.18கள் கோடி எனக் கூறப்படுகிறது. ஆக மொத்தம் அந்த ஒரே இணைய தொடரில் நடிக்க அவருக்கு சம்பளம் ரூ.126 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓடிடி தளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் அஜய் தேவ்கன்.
சைஃப் அலி கான் :
நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அசல் இணைய தொடர்களில் ஒன்றான 'சேக்ரட் கேம்ஸ்' என்ற தொடரில் இன்ஸ்பெக்டர் சர்தாஜ் சிங் என கேரக்டரில் நடித்ததற்காக அவருக்கு சம்பளமாக ரூ.15 கோடிகள் வழங்கப்பட்டது.
சல்மான் கான் :
ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சல்மான் கானுக்கு ஒவ்வொரு வாரத்திற்கும் ரூ.25 கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டது.
ஷாஹித் கபூர் :
ராஜ் & டிகே பிளாக் தயாரிப்பில் ஒளிபரப்பான காமெடி இணைய தொடரான 'ஃபார்ஸி' மூலம் ஓடிடி தளத்தில் அறிமுகமானவர் ஷாஹித் கபூர். அந்தத் தொடரில் நடித்ததற்காக ரூ.30 கோடி சம்பளமாக பெற்றார்.
விஜய் சேதுபதி :
விஜய் சேதுபதி நடித்த ஓடிடி தொடர் 'ஃபார்ஸி'. இத்தொடரில் நடிகர் ஷாஹித் கபூர் உடன் இணைந்து இன்ஸ்பெக்டர் மைக்கேல் வேதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சம்பளமாக ரூ.7 கோடிகள் ரூபாய் வழக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்கஜ் திரிபாதி :
தனது ஒவ்வொரு படத்திலும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய நடிகர் பங்கஜ் திரிபாதி, சேக்ரட் கேம்ஸ் 2 தொடருக்காக ரூ.12 கோடிகளும், மிர்சாபூர் 2 தொடருக்காக ரூ.10 கோடிகளும் சம்பளமாக பெற்றுள்ளார்.
ராதிகா ஆப்தே :
ராதிகா ஆப்தேவுக்கு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்துடனான உறவு பல ஆண்டு காலமாக நீடிக்கிறது. சேக்ரட் கேம்ஸ் தொடரில் ரா ஏஜென்ட் அஞ்சலி மாத்தூர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 4 கோடிகள் சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.
சமந்தா ரூத் பிரபு :
பேமிலி மேன் 2 இணைய தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் விடுதலைப் போராளியாக நடித்த சமந்தாவுக்கு 4 கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 'சிட்டாடல்' தொடரின் இந்திய பதிப்பில் வருண் தவான் ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா.