William Friedkin: பிரபல ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின் மரணம் .. சோகத்தில் ரசிகர்கள்...
The French Connection, The Exorcist, உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின் (William Friedkin) தனது 87 ஆவது வயதில் காலமானார்.
The French Connection, The Exorcist, உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின் (William Friedkin) தனது 87 ஆவது வயதில் காலமானார்.
வில்லியம் ஃப்ரைட்கின் (William Friedkin)
வில்லியம் ஃப்ரைட்கின் 1935 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி சிக்காகோவின் பிறந்தார். வில்லியமின் ஒரு ஜவுளிக் கடையை நடத்தி வந்தார். அவரது அம்மா ஒரு செவிலியராக இருந்தார். பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எந்த ஆசையும் வில்லியமின் தந்தைக்கு இருந்ததில்லை. தனது தந்தையின் மீது அபரிமிதமான அன்பு இருந்தாலும் அவரது இந்த குணத்திற்காகவே அவரை வெறுத்தார் வில்லியம்.
பள்ளியில் மிக சுமாரான மதிப்பெண்களைப் பெற்று வந்த வில்லியம் நன்றாக கூடைப்பந்து விளையாடக் கூடியவர். பதின் பருவத்தில் அவரது ஆர்வம் திரைப்படங்களை நோக்கி நகர்ந்தது. ஆர்சன் வெல்லஸ் இயக்கிய புகழ்பெற்ற படமாக சிட்டிஸன் கேன் (Citizen Kane) திரைப்படத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டார். தனது பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டார். தொடர்கள் , ஆவணப்படங்களை தொடர்ந்து இயக்கி வந்தார்.
தோல்வியடைந்த முதல் படம்
1967 ஆம் ஆண்டு தனது முதல் படமான குட் டைம்ஸ் படத்தை இயக்கினார் வில்லியம். தனது முதல் படம் குறித்து பிற்காலத்தில் வில்லியமிடம் கேட்கப்பட்ட போது சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு மோசமான படம் என்று சொல்லியிருக்கிறார்.
வாழ்க்கையை மாற்றிய தருணம்
இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கி வந்த வில்லியம் 1971 ஆம் ஆண்டு The French Connection என்கிற தனது வாழ்நாள் சாதனையாக இருக்கப்போகும் படத்தை இயக்கினார். மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரன் ஒருவனை காவல் ஒருவர் தேடிப்பிடித்த நிஜக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மொத்தம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றது. தனது 32 ஆவது வயதில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார் வில்லியம். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கு ஒரு சேஸிங் காட்சி ஹாலிவுட் சினிமாவில் எடுக்கப்பட்ட சிறந்த காட்சிகளில் ஒன்று.
#RIP William Friedkin (1935-2023)
— DepressedBergman (@DannyDrinksWine) August 7, 2023
The French Connection (1971)
Director: William Friedkin pic.twitter.com/iXclcgE8AG
The Exorcist
தனது முதல் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து ஹாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார் வில்லியம். இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஹாரர் திரைப்படமான எக்ஸார்சிஸ்ட் படமும் ஹாரர் திரைப்படம் வகையில் மற்றொரு மைல் கல்லாக அமைந்தது. திரையரங்கத்தில் இந்தப் படத்தை பார்த்தவர்கள் பல நாட்கள் தூக்கமில்லாமல் அவதிபட்டார்களாம். மொத்தம் பத்து பிரிவுகளின் கீழ் விருதிற்கு தேர்வாகி இரண்டு விருதுகளை வென்றது இந்தப் படம்.
தொடர் சரிவுகள்
இரண்டும் முத்திரை பதிக்கும் படைப்புகளுக்குப் பின் வில்லியம் இயக்கிய அடுத்தடுத்தப் படங்கள் தோல்விகளையே சந்தித்தன. தனது இந்த இரண்டு படங்களுக்கு நிகராக அவர் இன்னொரு படைப்பை உருவாக்கவில்லை. இனி வரக்கூடிய தலைமுறைகள் பேசும்படியான இரண்டு படங்களை உருவாக்கிய வில்லியம் தனது 87 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.