Chandrayaan 3: அடேங்கப்பா.. சந்திரயான் 3 பட்ஜெட்டை மிஞ்சிய திரைப்படங்கள்.. என்னென்ன தெரியுமா?
சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய இஸ்ரோவின் தகவலின் படி இந்த மிஷனுக்கு செய்யப்பட்ட செலவு ஆதிபுருஷ், மிஷன் இம்பாசிபிள் 7 மற்றும் இந்தியானா ஜோன்ஸ் படங்களை ஒப்பிடுகையில் மிக மிக குறைவே.
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம், கடந்த மாதம் 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு சாதனை படைத்தது.
மாபெரும் சாதனை :
வெற்றிகரமாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி தரையிறக்கம் செய்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்திய பெற்றுள்ளது. அமெரிக்கா, தற்போதைய ரஷ்யா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனை பட்டியலில் இந்திய இடம் பெற்றுள்ளதை உலகமே கொண்டாடி வருகிறது. இந்தியாவின் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பிரதமர் வாழ்த்து:
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மன்ற வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் அவரின் வாழ்த்து உரையில் சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்1 திட்டம் மற்றும் வெள்ளிக்கு விண்கலம் அனுப்பும் திட்டமும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திரயான் 3 மிஷனின் ஒட்டு மொத்த பட்ஜெட் தொகை 615 கோடி என தெரிவித்து இருந்தார் இஸ்ரோவின் தலைவர் கே.சிவன். அதே போல சந்திரயான் 2 மிஷனுக்கு அதிகபட்ச பட்ஜெட்டாக 978 கோடி செலவு செய்யப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.
ஆதிபுருஷ் :
வரலாற்று இதிகாசமான ராமாயணத்தை அடிப்படியாக வைத்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். பிரபாஸ், க்ரித்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் நடித்துள்ள இப்படத்தின் பட்ஜெட் சுமார் 700 கோடி.
மிஷன் இம்பாசிபிள் 7 :
அதே போல ஹாலிவுட்டில் டாம் குரூஸ் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான மிஷன் இம்பாசிபிள் 7 திரைப்படம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஏழு பாகங்களைக் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடி மகிழும் இப்படத்தின் பட்ஜெட் தொகை சுமார் 2385 கோடி என கூறப்படுகிறது.
இந்தியானா ஜோன்ஸ் :
கடந்த ஜூன் மாதம் வெளியான இந்தியானா ஜோன்ஸ் மற்றும் டயல் ஆஃப் டெஸ்டினி திரைப்படம் சுமார் $302 மில்லியன் பட்ஜெட்டில் உருவானது. அனால் இப்படம் பெரிய அளவு மக்களின் வரவேற்பை பெற தவறி $295 மில்லியன் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.
உலகளவில் இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டியுள்ள சந்திரயான் 3 மிஷனுக்கான பட்ஜெட்டை காட்டிலும் மூன்று மடங்கு பட்ஜெட் இந்த படங்களுக்கு செலவு செய்யப்பட்டுளது என்பது குறிப்பிடத்தக்கது.