மேலும் அறிய

Thangalaan update: பிறந்தநாள் பரிசாக தங்கலான் அப்டேட்... வெறித்தனமான விக்ரமின் புது போஸ்டர்!

தங்கலான் உலகில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு விஷயத்துக்கு தயாராகுங்கள் என ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்தது.

நாளை நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் பட அப்டேட் வெளியாகும் நிலையில்,  புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது.

பா.ரஞ்சித்தின் தங்கலான் 

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இணையும் திரைப்படம் ‘தங்கலான்’ நடிகர் பசுபதி, நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு கர்நாடகா மாநிலம், கோலார் தங்க சுரங்கத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருவதாக  தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

இந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது தங்கலான் படம் உருவாகி வருவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன.

நாளை பிறந்தநாள் கொண்டாடும் சீயான்

இந்நிலையில் நாளை விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு ஏற்கெனவே அப்டேட் ஒன்றைப் பகிர்ந்திருந்தது.  கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இதுகுறித்து அறிவித்திருந்தது படக்குழு, தங்கலான் உலகில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு விஷயத்துக்கு தயாராகுங்கள் எனக்கூறி விக்ரமின் சில் அவுட் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது.

இந்நிலையில், தற்போது புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், தங்கலான் அப்டேட் நாளை காலை 9.05 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனுடன் தங்கலான் விக்ரமின் புதிய போஸ்டர் ஒன்றையும் ஸ்டிடுயோ க்ரீன் நிறுவனம் பகிர்ந்துள்ளது. நாளை நடிகர் விக்ரம் தன் 57ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.

உற்சாகத்தில் ரசிகர்கள்

கடந்த சில வாரங்களாக தங்கலான் கெட் அப்பிலேயே நடிகர் விக்ரம் பொது நிகழ்ச்சிகளுக்கு வருகை தருகிறார். பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் பணிகளிலும் தங்கலான் கெட் அப்பில் விக்ரம் மாஸாக வலம் வரும் நிலையில், அவரது ரசிகர்கள் ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், நாளை அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் தங்கலான் அப்டேட் குறித்து விக்ரம் ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

சென்ற ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து விக்ரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். தற்போது அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் வரும் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தையும் விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். 

மேலும் படிக்க: Actor Prashanth: பிரசாந்த் வீழ்ச்சிக்கு திருமணம்தான் காரணம்...ஆனா விஜய், அஜித்தைவிட ஓஹோனு இருக்கார்... ஜோடி பட இயக்குநர் பிரவீன் காந்தி பளிச்!

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget