Thaman at Varisu Success Meet : “எங்களுக்காகத்தான் விஜய் சார் இதை செய்தார்; அதனால்தான் அழுதேன்” - சக்சஸ் மீட்டில் தமன்
ரஞ்சிதமே பாடலை 1.5 நிமிடம் ஒரே டேக்கில் நான்-ஸ்டாப்பா ஆடினார். அவர் டான்ஸ் ஆடியதை பார்த்த நான் அழுதுவிட்டேன். எங்களுக்காக அவர் இதை செய்தார் - இசையமைப்பாளர் தமன்
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் 'வாரிசு'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று கலக்கலான ஒரு ஹிட் திரைப்படமாக தெறிக்கவிட்டு வருகிறது.
வாரிசு பிரஸ் மீட் :
'வாரிசு' படத்துக்கு அனைவரும் கொடுத்த வரவேற்பிற்காக சென்னையில் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் சரத்குமார், ஷ்யாம், விடிவி கணேஷ், நடிகை சங்கீதா, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், ஒளிப்பதிவாளர் பிரவீன் கலந்து கொண்டனர். இப்படம் வெளியான ஐந்தே நாட்களில் அமோகமான வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் வாரிசு படத்திற்கு கொடுத்து வரும் வரவேற்பிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் படக்குழுவினர்.
உழைப்பு தான் வெற்றிக்கு வழி வகுத்தது:
இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இசையமைப்பாளர் தமன் பேசுகையில் " இந்த திரைப்படம் எங்களுக்கு கிடைத்த ஒரு வரம். அதை எப்பாடு பட்டாவது வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்து எங்களின் முழு உழைப்பையும் போட்டோம். 'ரஞ்சிதமே' பாடல் கடைசியில் தான் வரும். ஆனால் அது வரைக்கும் அனைவரையும் ஒரு இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்றால் அதற்கு அனைவரின் உழைப்பும் ஒத்துழைப்பும் காரணம். இந்த படத்தின் வெற்றிக்கு ஒருவர் மட்டுமே காரணம் என சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள்" என்றார்.
#Varisu success meet - I played as a programmer in #ThalapathyVijay's Pokkiri & Poove Unakkaga. It took 27 yrs to join with Vijay sir & thankfully #Varisu has become a HUGE HIT.. 💥
— VCD (@VCDtweets) January 16, 2023
- #Thaman
வம்சி இப்படிப்பட்டவரா?
இயக்குநர் வம்சி சரியான டென்ஷன் பார்ட்டி. மைக் வைத்து இருக்கிறாரா அல்லது கத்தி வைத்து இருக்கிறாரா என்பதே தெரியாது அந்த அளவிற்கு செட்ல அவ்வளவு ஸ்ட்ரிக்டா இருப்பார். அந்த அளவிற்கு படத்தின் மீது மிகுந்த ஃபோகஸுடன் இருப்பார். அது தான் இன்றைக்கு இந்த திரைப்படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. எமோஷனுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு வருடத்திற்கு முன்னர் நாங்கள் இப்படத்தின் முதல் பாடலான 'வா தலைவா' பாடலை உருவாக்கும் போது எந்த அளவிற்கு ஆர்வமாக இருந்தாரோ அதே ஆர்வம் படம் முடியும் வரை அவரிடம் இருந்தது. அவரின் இணையான உழைப்பும் தான் இந்த படத்தின் பாடல்கள் அனைத்து சூப்பர்ஹிட் பாடல்களாக அமைவதற்கு முக்கியமான காரணம்.
விவேக் இதில் ரொம்ப உறுதி :
அடுத்ததாக பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் அபாரமானது. அனைத்து பாடலுக்கும் இது தான் டைட்டிலாக இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். வாரிசு படத்தின் இசை வெற்றி பெற்றதற்கு 50% பங்கு விவேக் உடையது. எனவே வாரிசு படத்தின் இசை வெற்றி பெற நான், வம்சி, விவேக் மூன்று பெரும் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் இல்லையென்றால் பையை தூக்கிக்கொண்டு ஊர் திரும்ப வேண்டும் என்ற நிலைமையில் இருந்தோம்" என்றார்.
#Varisu success meet - #Thaman appreciates #Anirudh for giving chartbusters with #ThalapathyVijay.. 👏
— VCD (@VCDtweets) January 16, 2023
என்னை அழவைத்தார் :
நடிகர் விஜய் நடிப்பில் இதற்கு முன்னர் வந்த பீஸ்ட், மாஸ்டர் படங்களில் எல்லாம் அனிருத் வேற லெவல் பாடல்களை போட்டு பிரித்து தள்ளிவிட்டார். ஒரு ட்ரெண்ட் கிரியேட் செய்துவிட்டார். அதற்கு இணையாக நாங்களும் விஜய் சார் பெயரை கெடுத்து விட கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தோம். அதற்காக நாங்கள் போட்ட உழைப்பை புரிந்துகொண்ட விஜய் சாரும் அதற்கு ஏற்ற பங்கை கொடுத்தார். ரஞ்சிதமே பாடலை 1.5 நிமிடம் ஒரே டேக்கில் நான்-ஸ்டாப்பா ஆடினார். அவர் டான்ஸ் ஆடியதை பார்த்த நான் அழுதுவிட்டேன். எங்களுக்காக அவர் இதை செய்தார். அது ரொம்ப பெரிய விஷயம்" என்றார் இசையமைப்பாளர் தமன்.