Thalapathy Vijay: தமிழக முன்னேற்ற கழகம்.. வைரலாகும் விஜய் அரசியல் கட்சி பெயர் - பலரும் வரவேற்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் விரைவில் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான தகவலும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
அரசியல் களத்தில் விஜய்
இதற்கிடையில் விஜய் விரைவில் அரசியல் களத்தில் களமிறங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த தகவல். இதற்காக கடந்த 14 ஆண்டு காலமாகவே அவர் ஒவ்வொரு அடியாக எடுத்து வருகிறார். தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியது, 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது, ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாராவே சந்தித்தது, அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ராகுல் காந்தியை சந்தித்தது என முதல் 10 ஆண்டுகள் பார்த்து பார்த்து அரசியல் நகர்வுகளை செயல்படுத்தி வந்தார்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக அரசியலில் களமிறங்குவது தொடர்பாக விஜய் பல திட்டங்களை கையிலெடுத்தார். முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகளை தனது புகைப்படம், மக்கள் இயக்கத்தின் கொடி எதையும் பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட செய்து மக்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள செய்தார். இதில் நல்ல பலன் கிடைத்தது. உள்ளாட்சி தேர்தலில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை மக்கள் இயக்க நிர்வாகிகள் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் இயக்கம் மூலம் நூலகம், மாலை நேர படிப்பகம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். கடந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களை தொகுதி வாரியாக அழைத்து பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இதன்பின்னர் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்கினார்.
தமிழக முன்னேற்ற கழகம் - இந்த பெயர் இருந்தால் அருமை .
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 29, 2024
ஒட்டுமொத்த தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு கட்சி !
வாழ்த்துக்கள் அண்ணா @actorvijay !
மேலும் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து தொகுதி தொடர்பான கள நிலவரங்களையும் கேட்டறிந்து வந்தார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பெரும்பாலும் பலரும் வரவேற்பு இருக்கும் நிலையில், சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
அரசியல் கட்சி பெயர்
விஜய் அரசியலுக்கு வருவது 100% உறுதியாகி விட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அரசியல் கட்சியை பதிவு செய்ய மக்கள் இயக்கத்தில் பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முன்னேற்ற கழகம்
— Anitha Sampath (@anithasampath_) January 29, 2024
வெல்வான் தமிழன் 👑
இந்நிலையில் விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சிக்கும் தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக