Thalapathy 67 Cast: “தளபதி 67” படத்தின் அடுத்த அப்டேட்... 21 ஆண்டுகளுக்குப் பின் விஜய்யுடன் நடிக்கும் இயக்குநர் மிஷ்கின்..!
Thalapathy 67 Cast Update: நடிகர் விஜய்யின் 67வது படத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் 67வது படத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி
கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். இந்த படத்தை . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். கொரோனா காலத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று திரையுலகினருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
இந்நிலையில் தான் தளபதி 67 படத்தின் மூலம் விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர் என்றும், அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரலான வீடியோ
தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் ஆகியோர் உள்ளனர்.
அடுத்தடுத்து வெளியாகும் “தளபதி 67” அப்டேட்
இதற்கிடையில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு வெளியிட தொடங்கியுள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கினும் இணைந்துள்ளார்.
View this post on Instagram
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மிஷ்கின், “21 வருடங்களுக்குப் பின் விஜய்யின் யூத் படத்தில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றினேன். எங்கள் இருவருக்குமான பந்தம் இத்தனை ஆண்டுகளில் மாறாத ஒன்றாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் லோகேஷூக்கும் எனக்கும் இருக்கும் பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையின் காரணமாக இது என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. உங்களுடன் நானும் தளபதி 67 படத்தை தியேட்டரில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.