Thalaivar 170: நீங்க தான் தலைவர், லீடர்.. சந்தேகமேயில்ல.. ரஜினிகாந்துக்கு அவர் பாணியிலேயே பதிலளித்த அமிதாப்!
இந்திய சினிமாவின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் இருவரும் நடிக்க, ஜெய் பீம் இயக்குநர் த. செ.ஞானவேல் இயக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’.

‘தலைவர் 170’ ஷூட்டிங் தளத்தில் அமிதாப் பச்சன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்த நிலையில், அவரது பதிவுக்கு அமிதாப் பதில் அளித்துள்ளார்.
இந்திய சினிமாவின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் இருவரும் நடிக்க, ஜெய் பீம் இயக்குநர் த. செ.ஞானவேல் இயக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’. இப்படத்தில் ரஜினி - அமிதாப் இருவரும் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர்.
லைகா நிறுவனம் இப்படத்தினைத் தயாரிக்கும் நிலையில், ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது பான் இந்தியா அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக கொச்சியில் தொடங்கி, தற்போது திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து தன் நீண்ட கால நண்பர் அமிதாப் உடன் ரஜினிகாந்த் க்யூட்டான ஃபோட்டோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இன்று காலை முதல் சமூக வலைதளங்களை இந்த ஃபோட்டோ ஆக்கிரமித்தது.
“33 ஆண்டுகளுக்குப் பின் எனது வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” எனவும் ரஜினி தன் பதிவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தின் இந்தப் பதிவுக்கு அமிதாப் பதில் பதிவு பகிர்ந்துள்ளார்.
அதில், "ரஜினி சார்.. நீங்கள் மிகவும் பெருந்தன்மையுடன் பதிவிட்டுள்ளீர்கள். ஆனால் படத்தின் தலைப்பைப் பாருங்கள்.. தலைவர் 170.
நீங்கள் தான் லீடர், தலைவர், தி சீஃப். அதில் ஏதும் சந்தேகம் இருக்கிறதா? என்னை உங்களுடன் ஒப்பிட முடியாது ரஜினிகாந்தின் 170ஆவது படம். 33 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன ஒரு பெருமை என்ன ஒரு பாக்கியம்! நீங்கள் கொஞ்சம்கூட மாறவில்லை.. எப்போதும் சிறப்பானவர்” என அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளார்.
T 4709 - Back with the great THALAIVAR .. the Leader, the Head, the CHIEF .. @rajinikanth on his 170th film .. what an honour and a huge privilege .. after 33 years .. !! and you haven't changed a bit .. still the GREATEST 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) October 25, 2023
Thalaivar 170 🌹 pic.twitter.com/Ob0qXx0s8M
இந்நிலையில், இருவரும் மாறி மாறி தன்னடக்கத்துடன் பகிர்ந்துள்ள பதிவுகள் இணையத்தில் இதயங்களை அள்ளி வருகின்றன. மேலும், இருவரது நட்பையும் ரசிகர்கள் சிலாகித்து கமெண்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.





















