"நாதஸ்" செந்தில் ரீ-என்ட்ரி... இறுதிக்கட்டத்தை நெருங்கியது "தடை உடை"
Bobby Simha: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ள நிலையில் விரைவாக "தடை உடை" படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் பாபி சிம்ஹா.
Bobby Simha : சத்யவான் பாபி சிம்ஹாவின் "தடை உடை" படம் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பில் வெளியான திரைப்படம் "மகான்". இப்படத்தில் சத்தியவான் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் மிரட்டலாக நடித்திருந்தார் நடிகர் பாபி சிம்ஹா. அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நெஸ்ட் ப்ராஜெக்ட் :
ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது "தடை உடை" வேண்டும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்போது மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது என தகவல் அளித்துள்ளனர் படக்குழுவினர். இயக்குனர் என்.எஸ்.ராகேஷ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் துணை இயக்குனராக நலன் குமாரசுவாமி மற்றும் "எங்கேயும் எப்போதும்" புகழ் எம்.சரவணன் இடமும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா முத்திரை பிலிம் ஃபாக்டரி மற்றும் ஆருத்திரா பிக்சர்ஸ் நிறுவனத்தில் கீழ் இப்படத்தினை தயாரித்துள்ளனர். "தடை உடை" படத்தில் மிஷா நரங், ரோகினி, நகைச்சுவை நடிகர் செந்தில், பிரபு, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பூஜையுடன் ஆரம்பம்:
மே 3ம் தேதி முஹுர்த்த நேரத்தில் படத்தின் பூஜைக்கு பிறகு படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. பல திரை பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் ஸ்டில்கள் வெளியானது :
இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் படக்குழுவினர் தற்போது சில ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் என்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அக்டோபர் 2022ல் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றனர் படக்குழுவினர்.
View this post on Instagram
கேக் வெட்டி கொண்டாட்டம் :
இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடிகை ரோகினி நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்தன. அவரின் கடைசி படப்பிடிப்பு நாளன்று படத்தின் தயாரிப்பளர்கள் படப்பிடிப்பு செட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
இந்தியன் 2 விற்கு ரெடியாகும் பாபி சிம்ஹா:
இந்தியன் 2 திரைப்படத்தின் பாபி சிம்ஹா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஆரம்பிக்க உள்ள நிலையில் பாபி சிம்ஹா " தடை உடை" படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடித்து விட்டு "இந்தியன் 2" படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார்.