Parijatham: மாமியார் புடவையை எரித்த மூத்த மருமகள்.. மேக்கப் போட்டுவிட்ட சின்ன மருமகள் - பாரிஜாதத்தில் எ-
பாரிஜாதம் சீரியலில் சுபத்ரா புடவையை ஸ்ரீஜா எரித்த நிலையில், இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இதுவரை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியல் இன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
சுபத்ரா புடவையை எரித்த ஸ்ரீஜா:
இந்த சீரியலில் நடந்த சனிக்கிழமை எபிசோடில் சுபத்ராவின் 25-ம் வருட திருமண விழாவை கொண்டாட திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது விஷால் சுபத்ராவின் 25 வது நாள் திருமண நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கவனிக்கிறான். ஸ்ரீஜா சுபத்ராவின் திருமண நாளுக்காக எடுத்த புடவையை திருடி எரித்து விடுகிறாள்.
மாமியாருக்கு மேக்கப்:
இதனால் சுபத்ரா இசை எடுத்த புடவையை கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாக வேறு வழி இல்லாமல் அந்த புடவையை கட்டிக் கொள்கிறாள். அதைத்தொடர்ந்து சுபத்ராவுக்கு இசையை மேக்கப் போட சொல்கின்றனர். ஆனால் சுபத்ரா அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறாள்.
இதனால், இசை பர்தா அணிந்து தனது அடையாளத்தை மறைத்து சுபத்ராவுக்கு மேக்கப் போட தயாராகுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















