Meenakshi Ponnunga: கேஸை வாபஸ் வாங்க சொன்ன ரங்கநாயகி.. வாக்குவாதம் செய்த சக்தி..இன்றைய எபிசோட் இதோ..!
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் வெற்றி மீதான கேஸை வாபஸ் வாங்க சொல்லி ரங்கநாயகி மீனாட்சி வீட்டுக்கு வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் வெற்றி மீதான கேஸை வாபஸ் வாங்க சொல்லி ரங்கநாயகி மீனாட்சி வீட்டுக்கு வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
இன்றைய எபிசோடில் சக்தியிடம் வெற்றி மீதான கேஸை வாபஸ் வாங்க சொல்லி ரங்கநாயகி மீனாட்சி வீட்டிற்கு வருகிறார். அங்கு சக்தியிடம் பேசி கேஸை வாபஸ் வாங்க சொல்கிறார். ஆனால் வெற்றியை தவறாக பேசி கேஸை வாபஸ் வாங்க முடியாது, கையெழுத்து போட முடியாது என்று சக்தி சண்டை போடுகிறார்.
View this post on Instagram
அப்பொழுது அங்கு வரும் மீனாட்சி ரங்கநாயகியை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். மேலும் சக்தி தன்னுடைய மகள் தான் என்று சொல்லி அவளை ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார். உடனே ரங்கநாயகி கணக்குப்பிள்ளையிடம் சொல்லி ஒரு புதிய புடவையை வாங்கி கொடுத்து சக்தியை ஆசிர்வாதம் செய்கிறார். பின்னர் வெற்றி மேல் ஏன் போலீசில் கம்பளைண்ட் கொடுத்தாய் என்று மீனாட்சி சக்தியிடம் கேட்கிறார்.
உடனே சக்தி சாந்தாவின் கணவனை அடித்த விஷயமாக நான் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன் என்று சொல்கிறார். ஆனால் மீனாட்சி சாந்தா கூறியது அனைத்தும் பொய், உண்மையில் பணம் பறிபோன விஷயத்தால் நான் தான் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்தேன் என்று சொல்கிறார். உன்னை சமாளிக்கவே சாந்தா பொய் கூறினார் என்றும், உண்மையான காரணத்தை மீனாட்சி சொல்கிறார்.
இதனால் அதிர்ச்சியடையும் சக்தியை துர்கா சமாதானம் செய்ய, அதைக் கேட்காமல் சக்தி புடவையை எரித்து விடுகிறார். பின்பு தான் எரித்தது ரங்கநாயகி கொடுத்த புடவை அல்ல.. சங்கிலி கொடுத்த புடவை என்று தெரிந்து டென்ஷனாகிறார். இதனையடுத்து ரங்கநாயகி பூஜாவிடம் அவளுக்கு கிப்ட் வாங்கி வைத்திருப்பதாக சொல்லி கணக்குப்பிள்ளையிடம் எடுத்து வர சொல்கிறார். அவர் கிப்ட் ஆக வாங்கிய புடவையை சக்தியிடம் கொடுத்து விட்ட விஷயத்தை சொல்கிறார். இதனால் அதிருப்தியடையும் பூஜாவை ரங்கநாயகி சமாதானப்படுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து சக்தியிடம் கோபத்தில் எடுத்த முடிவு தவறாக போய்விடும் என்பதற்கு இந்த புடவையே உதாரணம் என்று சொல்லி துர்கா அறிவுரை கூறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.